உணர்ச்சிகள் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது - ஜனாதிபதி
உணர்ச்சிகள் அல்லது உள்ளுணர்வுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும். யாரும் தனித்தனியாகச் செயல்பட முடியாது. இந்த ஆண்டுக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 574 மில்லியன் நிதி ஒதுக்கியிருந்தாலும், அதில் இதுவரை 23 மில்லியன் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
ஹம்பந்தோட்டை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்ற ஹம்பந்தோட்டை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

Post a Comment