யார் இந்த பிரான்செஸ்கா அல்பானீஸ்..? குறிவைக்கப்பட்டது ஏன்..??
2022 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
காஸா மற்றும் மேற்குக் கரையில் சியோனிச இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இராணுவத் தாக்குதல்களை இவர் பகிரங்கமாகவும், மிகக் கடுமையாகவும் விமர்சித்து வருகிறார். இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச அளவில் பொறுப்பேற்க வேண்டும் என்பதை இவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
தற்போது ஃபிரான்செஸ்கா மீது டொனால்ட் ட்ரம்ப் தடைகளை விதித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் எதிராக அல்பானீஸ் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேல் மற்றும் அமெரிக்க போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர் விடுத்த கோரிக்கையே அமெரிக்காவை சினமூட்டியுள்ளது.
காஸிவில் நிகழும் தாக்குதல்கள் தொடர்பாக சியோனிச இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளையும் அல்பானீஸ் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் சியோனிச இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் போன்றோரை கைது செய்யுமாறு அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இத்துடன் அவரது செயல்பாடு நிற்கவில்லை.
இஸ்ரேலுக்கு காஸாவில் குழந்தைகளைக் கொல்லத் துணை புரிந்து, அதன் மூலம் இலாபம் ஈட்டும் அமெரிக்க தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களையும் இந்தப் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச சட்டங்களின் கீழ் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிறுவனங்களுக்கு அல்பானீஸ் ஏற்கனவே டஜன் கணக்கான கடிதங்களை அனுப்பியுள்ளார்.
அமெரிக்கா தனக்கு விதித்த தடைகள் குறித்து அறிந்திருந்த போதிலும், அல்பானீஸ் பகிரங்கமாகப் பதிலளிக்கவில்லை.
இருப்பினும், அவர் ஓரிரு விஷயங்களை எள்ளல் தொனியுடன் குறிப்பிட்டார்: "இது ஒரு வகையான மாஃபியா பாணி மிரட்டல்" என்று.
குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வரும் தனது போராட்டத்தில் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.
ஃபிரான்செஸ்கா அல்பானீஸின் இந்த அசைக்க முடியாத துணிச்சலுக்கு எமது மரியாதை. வாழ்த்துகள்!
Jayarajan C N

Post a Comment