Header Ads



கோத்தா பின்வாங்கினார் - சஜித்தும், அனுராவும் முன்வந்தனர்

தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் அமர வைத்து, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை அறியும், நேரடி விவாத நிகழ்வு வரும் 5ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

மார்ச் 12 அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு, ஒக்ரோபர் 5ஆம் நாள் மாலை 4 மணி தொடக்கம், 6 மணி வரை சிறிலங்காவின் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்க ஐதேக வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச, இந்த நேரடி விவாத நிகழ்வில் பங்கேற்க இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லை.

இந்த விவாத நிகழ்வில் முன்னரே தெரிவு செய்யப்பட்ட கேள்விகள், பிரதான வேட்பாளர்களிடம் எழுப்பப்படும்.

பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு, பெண்கள் உரிமைகள், உள்ளிட்ட பரந்துபட்ட விவகாரங்கள் குறித்து வேட்பாளர்களிடம் கேள்விகளை எழுப்புவதற்கான சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Good Move so that public will have a chance to know the competent leader.

    ReplyDelete

Powered by Blogger.