Header Ads



இம்ரான்கான் போன்று, நானும் செயற்படுவேன் - சஜித் பிரேமதாச

இந்நாட்டில் சிறுபான்மையின மக்கள் ஒன்று இல்லை. இந்நாட்டிலுள்ள எல்லா மக்களும் சமனாகும். தன்னுடைய காலத்தில் சிறுபான்மை என்ற சொல்லுக்கு இடமளிக்கப் போவதில்லை. எல்லோரும் இந்நாட்டு மக்களாகும்.  எந்த சமயங்களையும்  நிந்தனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என்பதுடன் பௌத்த சமயம் மிகவும் உன்னதமான சமயமாகும். 

அந்த சமயத்தின் ஒழுக்க நெறி முறையில் நின்று ஏனைய  சமயங்களையும் சமனாக மதித்து ; மனிதநேயத்துக்கு முன்னுரிமையளித்து பாக்கிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கானின் தலைமைத்துவப் பண்புகளுக்கு இணங்க தானும் புது  யுகமான நாட்டை  உருவாக்குவதற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயறபடுவேன் என்று  ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாச எம்மிடம் உறுதியளித்துள்ளதாக  என்று மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ராஜகிரியவிலுள்ள ரோயல் பாக்கிலுள்ள ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான  சஜித் பிரேமதாச அவர்களுடைய இல்லத்தில் தமிழ் மக்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட  மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இந்நாட்டில் பாக்கிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் போன்றதொரு நல்ல தலைவர் வருவதற்கு 10 வருடம் எடுக்கலாம் என்று நான் மனதில் கருதியிருந்தேன். ஆனால் உண்மையிலேயே ஜயாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடைய இல்லம் சென்று பார்த்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

எம்மைப் போன்று சாதாரண  ஓர் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றார். அவர் அப்போது தான் கூட ஒரு இம்ரான் கான் மாதரியான தலைவராக செயற்பட இருக்கின்றேன் என்று எம்மிடம் கூறினார். உண்மையிலேயே நாங்கள் அந்த வார்த்தையை கேட்டதும்  எல்லோரும் ஆச்சரியத்துடன்  இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தோம். 

நாட்டின் இறையாண்மையுடன் உயர்ந்த பட்ச அதிகார பகிர்வை ஏற்படுத்தி அமைதி, நல்லிணக்கம்,  நிலைபேறான ஸ்தீரத்தன்மை கொண்ட நாடொன்றை  உருவாக்குவதற்கான உறுதியான எண்ணப்பாடுகள் அவரிடம் உள்ளன. தன்னுடைய தந்தை தமிழ் மக்களுக்கு எதை தீர்வாக வழங்க இருந்தோரோ அந்த தீர்வை தான் தமிழ் மக்களுக்குவழங்கத் தயாராக இருக்கின்றேன். குறிப்பாக தன்னுடைய தந்தை அன்று கூறியபடி ' ஈழம்தர மாட்டேன். மற்றைவை எல்லாம் தருவேன்' என்று தமிழிலே இவ்வாறு கூறினார் என்று  அவர்  தெரிவித்தார்.

நிச்சயமாக அதனை பொறுப்புடன் நிறைவேற்றக் கூடிய திறனும் வல்லமையும் இருப்பதை இயல்பாகவே  நாம் அவரிடம் காண்கின்றோம் எனவும் தெரிவித்தார்

வெற்றிபெற்றாலும் ஜனாதிபதி மாளிக்கைக்கு செல்வதில்லை. நான் வசிக்கின் இல்லத்திலேயே தம்முடைய கடமைகளைக் மேற்கொள்ள இருப்பதாக வலியுறுத்திக் கூறிய அவர் இலங்கையிலுள்ள ஜனாதிபதி மாளிகைள் எல்லாம் சர்வதேச தரத்திலான தகவல் தொழில் நுட்ப பல்கலைக்கழகமாகவும், கனணி ஆய்வு ஆராய்ச்சி கூடங்களாகவுமாகவும் மாற்றியகை;கவுள்ளேன் எனவும்   வடக்கு கிழக்கு உட்பட்ட நாடளாவிய ரீதியில் ஒரே சமனான வகையில் எல்லாயின மக்களும் நிம்மதியுடன் வாழ்வதற்கான முன்னேற்றகரமான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று எனவும்  மேலும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாகல ரத்நாயக, சாகல, சின்னத்துரை செல்வேந்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி

2 comments:

  1. இம்ரான் கான், உத்தியோகபூர்மான ஒரு விஜயத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு மேற்கொண்டார். அப்போது நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணாக்க க்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் நியூயோர்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தங்கி கடமைகளை முடித்துவிட்டு சாதாரண பிரஜைகள் பயணம்செய்யும் விமானத்தில் பயணம்செயது திரும்பினார். அப்படியானால் இலங்கை சனாதிபதியாகபோட்டியிடும் சஜித்தும் இம்ரான் கானைப் பின்பற்றிவாரா. ஆம்.தேர்தல் பிரசாரங்களில் பின்பற்றுவார்.தெரிவுசெய்யப்பட்டால் தனக்கு முன்னிருந்தவர்களைப் பின்பற்றி 100மேற்பட்ட அரசியல் சாக்கடைகளுடன் வழமைபோல் பயணம்செய்து கோடானகோடி பொதுமக்கள் பணத்தை அள்ளிக்கொட்டிவிட்டு வெருங்கையுடன் திரும்புவார். அவ்வளவு தான். ஆனால் இந்த அடாவடித்தனத்தை ஜே.வீ.பீசெய்யமாட்டாது என சாதாரணமாக நம்புகிறோம். ஆனால் பதவிக்கு வந்தால் சிலவேளை எமது கருத்தை வாபஸ்பெறவேண்டியும் இருக்கும்.

    ReplyDelete
  2. considering the previous and current situations, can they come to the post???

    ReplyDelete

Powered by Blogger.