Header Ads



ஐதேக வேட்பாளரை அறிவிக்கும்வரை கூட்டணி பற்றிய, ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது - ஹக்கீம்

ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு களமிறக்கப்படும் வேட்பாளர் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை புதிய கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், புதிய கூட்டணியின் செயலாளர் பதவி என்பது மிகவும் தீர்க்கமான ஒன்று எனக் கூறியுள்ள ரவூப் ஹக்கீம், இந்தப் பதவி ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரிடம் இருப்பது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. முஸ்லீம் காங்கிரசின் இந்த முடிவு ஒரு விவேகமான முடிவு, அதுமாத்திரமல்ல, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சி எப்படியும் ஒரு இளையவரின் கைக்குபோகப்போகிறது அது அநேகமாக சஜித்தாக இருக்கலாம், இனியும் ரணிலை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, முன்னாள் ஜனாதிபதி கௌரவ பிரேமதாச முஸ்லிம்களுடனும் முஸ்லீம் காங்கிரஸுடனும் நல்ல உறவைப்பேணியவர் என்றவகையில் சஜித் போன்றவர்களை நாங்கள் அங்கீகரிப்பது மாத்திரமல்லாது ஜனாதிபதி வேட்பாளராவதற்கு முஸ்லிம்காங்கிரஸ் தங்களது செல்வாக்கினைப்பயன்படுத்துவதனூடாக எதிர்கால தமைத்துவத்திடம் எமக்கான இருப்பினை அதிகரித்துக்கொள்ளலாம், மாறாக ஜனாதிபதி பதவியினை இல்லாமலாக்குவதற்கு நாங்கள் ஆதரவளிக்கக்கூடாது, அதிலும் மீண்டுமொரு மைத்திரியினை உருவாக்கினால் இந்தநாடும் சிறுபான்மைச்சமூகம்களும் தாங்காது

    ReplyDelete

Powered by Blogger.