Header Ads



நாம் கண்ணுக்கு தெரியாத, எதிரியுடன் போராடவேண்டியுள்ளது

ஈஸ்டர் தாக்குதலுடன் தோடர்புபட்ட குற்றவாளிகள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவார்கள். சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும் கைதுகள் தொடரும். இந்த அமைப்பின் பின்னணி குறித்த புலனாய்வுத்துறை தேடுதல்களை  முன்னெடுத்து  வருகின்றது எனத் தெரிவித்த  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக. நல்லூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் வடக்கின் இராணுவ குவிப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு பதில் கூறும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு மாதங்கள் கடந்தாலும் இன்னமும் கைதுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை தொடரும். கைதுகள் நிறுத்தப்படாது. அத்துடன் இந்த பயங்கரவாத அமைப்பு குறித்த தேடுதல் நடவடிக்கைகளை எமது புலனாய்வுத்துறை முன்னெடுத்து வருகின்றது. 

எதிர்காலத்தில் எமக்கு பல சவால்கள் உள்ளது. இனிமேல் நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடவேண்டிய நிலைமை உள்ளது. இந்த எதிரிகள் யுத்த  பூமியில் இல்லை. மக்களுடன் மக்களாக உள்ளனர். ஆகவே அவர்களை இனங்காணும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்றார்.

No comments

Powered by Blogger.