Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும், அநீதிக்காக குரல்கொடுக்க முன் வாருங்கள் - ஹரீஸ்

தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறைகளை மாத்திரம் விமர்சித்துக்கொண்டிருக்காமல் முஸ்லிம்களுக்கு  எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும். 

இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரதத்தை கட்டியெழுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பாக கடைப்பிடித்துவரும் நடவடிக்கைதொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் பேச்சுக்கள் முஸ்லிம் மக்களுக்கு அறிவுரை செய்வதிலும் அவர்களின் கலாசாரம் மற்றும் ஆடைகள் தொடர்பாக விமர்சிப்பதிலுமே இருக்கின்றன. 

ஆனால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் கெடுபிடிகள் தொடர்பாக குரல்கொடுப்பதை மிகவும் குறைவாகவே பார்க்கின்றோம். அது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாகும்.

ஏப்பரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஞானசார தேரர் போன்றவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து குரல்கொடுக்கும் தலைமைகள் தெற்கில் இருந்தனர். 

பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை தட்டிப்பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது இவர்களும் முஸ்லிம்களின் செயற்பாடுகள் நடை உடைகளில் குறைகாண்பதிலே இருக்கின்றனர்.

 இது முஸ்லிம் சமூகத்துக்கு ஒருவகையில மன அழுத்தத்தை கொடுக்கும் வகையிலே இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

3 comments:

  1. 1987 அல்லது 1988 காலப்பகுதில் அப்போதைய ஜனாதியாக இருந்த J R ￰ஜெயவர்தனவிடம் சில தமிழ் அரசியல்வாதிகள் சென்று.நாட்டில் பிரசினைகள் அதிகமாகிவருவகபும் இதற்கு எல்லாம் தீர்வு காணப்படவேண்டும் என்று கூறினார்கள், அதனை செவிமடுத்த JR அவர்கள் கூறினார்கள்.இது அல்ல நாட்டுக்கு பிரச்சனை எப்போது தென் இலங்கை உள்ளஒருவர் இந்த நாட்டை ஆளுகிறாரோ அப்போது தான் நாட்டுக்கு பிரசேனை என்று.மிக மிக தெளிவான அரசியல் சாணக்கியன் ஜன திபதி JR சொன்னது இன்று ந ட ப் ப தா க உணர்கின்றேன்.

    ReplyDelete
  2. கல்முனை தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இவரும் ஒரு இனவாதி தானே.

    காலம்காலமாக இப்படியான இனவாதிகளுக்கு முஸ்லிம்கள் வாக்களித்து, தமிழர்களுக்கு செய்த வினையைத்தான் இப்போ அப்பாவி முஸ்லிம்களும் அனுபவிக்கிறார்கள்.

    ReplyDelete
  3. Unknown முக்கியமான ஒரு ஜெ.ஆரின் மேற்கோளை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் தென் இலங்கை என்று பொதுவாக சிங்களப் பகுதிகளைக் குறிப்பிட்டாரா சொன்னாரா றுகன அனுராதபுரம் போன்ற கண்டி ராட்சியப் பகுதிகளைக் குறிப்பிட்டாரா? முடிந்தால் இந்த மேற்கோள் எங்கு கிடைக்கும் என்ன்பதை குறிப்பிடுங்கள். நட்புடன்

    ReplyDelete

Powered by Blogger.