Header Ads



றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா, பிரேரனையை நாம் எதிர்க்கிறோம் - தௌபீக் Mp

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, முஸ்லிம்களை முன்னிறுத்தி சமூக பிரச்சினையாகவே பார்ப்பதாக திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரசின் எம்.பி எம். எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரனையை நாம் எதிர்க்கிறோம். இந்த பிரேரனை முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களையும் இணைத்ததாக வருவதாலேயே எதிர்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவை தொடர்பாக அவரிடம் இன்று எமது செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் நாம் இறுதி தீர்மானத்தை எடுக்கவில்லை. மு.கா யின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை கட்சியின் தலைவர் கூட்டி , இப்பிரேரனை தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் இறுதி முடிவை அறிவிப்பார்.

ஆனால் நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

1 comment:

  1. Support unconditionally when there is a problem for our fellow brother. Tell Rauff not to try to get any fucking political advantages at this juncture.
    Suppose if this no confidence motion is passed, soon after the racist chase all Muslim parliamentarians out of the office stripped (with naked)

    ReplyDelete

Powered by Blogger.