Header Ads



IS பயங்கரவாத தாக்குதல் விசாரணை, முன்னேற்றத்தைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியம் - ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இடம்பெறும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கண்டு வெளிநாடுகள் கூட ஆச்சரியம் அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அல்ஃபிரட் துரையப்பா கொலைக்குப் பின்னர், பிரபாகரனுக்கு எதிராக ஆதாரங்களை தேடுவதற்கு 20 வருடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதத்துக்குள் அதுதொடர்பான விசாரணைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த குறுங்காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடியதாக இருந்துள்ளது.

ஆனால் கடந்த தினங்களில் நாட்டில் பதிவான அமைதியற்ற நிலைமைகள், இந்த விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மக்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (15) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்

4 comments:

  1. இப்போதாவது திரு.ரனில் அவர்கள் புலிப் பயங்கரவாதத்தை பற்றி கொஞ்ஞமாவது பேசியது வரவேற்கத் தக்கது.எப்போ சஹ்ரான் பன்னி தாக்குதல் நடத்தியதோ அன்ரிலிருந்து அனைத்து இனவாத அரசியல் வாதிகழும் 30 வருட புலிகளின் அனத்து பயங்கர செய்கைகலையும் மரந்து விட்டனர்

    ReplyDelete
  2. அது சரி. 21 ஆம் திகதி நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல். நேற்று முன்தினம் நடந்ததுக்கு பெயர் அமைதியின்மை யா?

    ReplyDelete
  3. ஆம் நாமும் ஆச்சரியப்பட்டோம் மீடியாக்களில் கத்தி வாள் அரங்கேற்றத்தை கண்டு!

    ReplyDelete

Powered by Blogger.