Header Ads



முஸ்லிம்கள் அனுபவித்த சலுகைகளை நசுக்க முயற்சி, றிசாட் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடிப்படையற்றது

(எம்.என்.எம்.அப்ராஸ்)

நெடுஞ்சாலைகள் அமைச்சின் 'ரன்மாவத்' வீதி அபிவிருத்திவேலைத்திட்டத்தின் கீழ்  கல்முனைநகர மண்டப வீதிக்கு காபெட் இடும்வேலையினை ஆரம்பித்து வைக்கும்அங்குரார்ப்பன நிகழ்வு கல்முனைமாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ்   தலைமையில் (24) இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகரபிரதி முதல்வர் கே.கணேஷ், மாநகரசபை உறுப்பினர்களான சட்டத்தரணிறோசன் அக்தர், ஏ.சி.சத்தார்,எம்.எஸ்.எம்.நிசா ர், அம்பாறைமாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர் எம்.பீ.அலியார், பொறியியலாளர்எம்.ஐ.எம்.றியாஸ்,  கல்முனைமுகைதீன் ஜூம்ஆப்  பள்ளிவாசல்தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ்,இராஜாங்க அமைச்சரின்இணைப்புச் செயலாளர் நௌபர்ஏ.பாவா உள்ளிட்ட பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

இதில் இராஜங்க அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாககலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறுதெரிவித்தார்

மேலும் அங்கு அவர்உரையாற்றுகையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளஅசாதாரண சூழ்நிலைமையினைபயன்படுத்தி இனவாத அரசியல்தலைமைகள் முஸ்லிம் சமூகம்அனுபவித்து வந்த சலுகைகளை சட்டரீதியாக நசுக்க முற்படுவதையிட்டுபிரதமர் உள்ளிட்ட சிரேஷ்டஅமைச்சர்களினடம் முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்கள்ஒன்றிணைந்து பலத்த எதிர்ப்பினைதெரிவித்துள்ளோம்.

குறிப்பாக முஸ்லிம் விவாகரத்து,திருமண  சட்டம், அரசாங்கஊழியர்கள் அனுபவித்து வருகின்றசலுகைகள்,  பெண்களின் ஆடைஉள்ளிட்ட விவகாரங்களைஇல்லாமல் செய்ய வேண்டும்என்பதற்காக சட்ட ரீதியாக எங்களைநெருக்கடிக்குள்ளாக்க இனவாதிகள்முயற்சிகளை செய்து வருகின்றனர்.

அமைச்சர் றிசாட் மீதானநம்பிக்கையில்லாப் பிரேரணைஅடிப்படையற்றது. இவ்விடயத்தில்பிரதமர் மிகத் தெளிவாக உள்ளார்.

கல்முனை தொகுதியிலுள்ளஅனைத்து  வீதிகளும் மூன்றுமாதத்திற்குள் அபிவிருத்திசெய்யப்படும். மேலும் மாவட்டத்தின்ஏனைய பகுதிகளுக்கும் தனதுஅமைச்சினூடாகநிதியொதுக்கீடு களைசெய்துள்ளதாகவும் இராஜங்கஅமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.