Header Ads



மைத்திரி - சஜீத் தலைமையில், புதிய அணி உருவாகுமா...?

 - நஜீப் பின் கபூர் -

வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதில் புதிதாக 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் அந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுக் கொள்வார்கள் என்று அறியப்படுக்கின்றது. 

இந்தப் 10 இலட்சம் வாக்காளர்கள் புதிய ஜனாதிபதியை அல்லது அரசாங்கத்தை தெரிவு செய்வதில் தீர்க்கமான சக்தியாக இருப்பார்கள்.

பிரசன்ன தலைமையில் வரவேற்ப்பு

அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த கோதா பரபரப்பான சூழ்நிலையில் நாடு திரும்பிய போது அவரை வரவேற்க்கின்ற பணியை முன்னாள் மேல் மாகாண முதல்வர் பிரசன்ன ரணதுங்ஹாவே தலைமை தாங்கி நடாத்தி இருக்கின்றார். 

இவரை வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே வழிநடாத்தி இருந்தார் என்றும் தகவல்கள் சொல்கின்றன. 

மைத்திரி-சஜீத் புதிய கூட்டு!

ஜனாதிபதி மைத்திரியும் ஐக்கிய தேசிக் கட்சியின் பிரதித் தலைவராக இருக்கின்ற சஜீத்துக்குமிடையே நெருக்கமான உறவுகள் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

தனக்கு ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்புக் கிடைக்காது என்ற நிலையில் மைத்திரியும் அதே நிலை ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கும் வாய்ப்பு இல்லை என்று உறுதியாகும் நிலையில் சஜீத்தும் இணைந்து புதியதோர் அரசியல் சக்தியை நாட்டில் தோற்றுவிக்க வாய்பிருக்கின்றது. 

சுதந்திரக் கட்சியில் இருந்த மஹிந்த தரப்பினர் ஸ்ரீ.ல.பொ.முன்னணியைத் தோற்றுவித்ததைப்போல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சஜீத் செல்வாக்கையும் சுதந்திரக் கட்சியில் இருக்கின்ற தற்போதய ஆதரவாளர்களையும் வைத்து ஒரு செல்வாக்கான அரசியல் சக்திக்கு நாட்டில் நல்ல வாய்ப்பு காணப்படுகின்றது என்பது எமது தனிப்பட்ட கருத்ததாகவும் இருந்து வருகின்றது. நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

கோதாவுக்கு விட்டுக் கொடுப்பு

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வேட்பாளர் வாய்ப்புக்கு இடமில்லை என்று புரிந்து கொண்ட மைத்திரி தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி இருக்கின்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் தனது கட்சிக்காரர்கள் தேவையில்லாமல் கோதாவை விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர் தற்போது அறிவுரை வழங்கி வருகின்றார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக மதுக்கடைகள் திறந்த ஜனாதிபதி

நமது நாட்டில் இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்களில் அதிக மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்கிய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்ஹ என்ற தகவலை மைத்திரிக்கு எண்ணிக்கை அடிப்படையில் சுட்டிக்காட்டி இருக்கின்றார் பாதுளை மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்தன. 

அப்புஹாமி என்ற ஒருவருக்கு மட்டும் 22 பேர்மிட்டுக்ளை சந்திரிக்கா வழங்கி இருக்கின்றார். எனக்கும் அது தெரியும் என்று அவரிடம் ஜனாதிபதி மைத்திரி பதில் சொல்லி இருக்கின்றார்.

பிரச்சாரத்துக்கு 20 இணையங்கள்

முன்கூட்டி வருவது ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி பொதுத் தேர்தலாக இருந்தாலும் சாரி அதற்கு 20 இணையத்தளங்களைக் கொண்டு பிரச்சார நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்குத் தேவையான பணத்தை அமெரிக்கா அள்ளி வழங்கி இருப்பதாகத் தெரிகின்றது. 

கோத - வாசு பேச்சுவார்த்தை

வருகின்ற ஜனாதிபதி தேர்தல்தான் முதலில் நடக்கப்போகின்றது என்றால் அதில் ராஜபக்ஸா தரப்பு வேட்பாளர் கோதா என்பது தற்போது ஏறக்குறைய உறுதியாகி வருகின்ற பின்னணியில் தனது எதிர்ப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தனது அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாகிவிடும் என்று எண்ணுகின்றார் போலும் வாசு. 

தனது இடதுசாரி அணியினரை அண்மையில் அழைத்துக் கொண்டு கோதாவை சந்தித்த அவர் 12 கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார். அதற்கு சாதகமான பதிலை கோதா கொடுத்ததால், தற்போது சிவப்புச் சட்டைக்கார வாசுவும் கோதாவுக்கு பச்சைக் கொடி காட்டி ஓகே என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டதாக எமக்கு நம்பகமாகத் தகவல் கிடைத்திருக்கின்றது.

No comments

Powered by Blogger.