Header Ads



இலங்கையில் நடந்த, குண்டு வெடிப்பின் பின்னணி - இரா.சுந்தரபாண்டியன்


இலங்கையின் தெற்கு, மேற்கு, கிழக்குப் பகுதி கடற்பரப்புகளில் அபரிமிதமான இயற்கை எரிவாயு உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை மேற்கொண்டது முழுக்க முழுக்க வெளிநாட்டு நிறுவனங்களே.

50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இயற்கை எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளன. குறிப்பாக தமிழகத்தின் அருகேயுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மிக அதிகமான அளவில் எரிவாயு உள்ளதாக முப்பரிமாண சோதனைகள் தெளிவுபடுத்தியுள்ளன.

இந்த எரிவாயு வளங்களை பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பம் இலங்கையிடம் இல்லை. இதற்கான டெண்டர் கோரி பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடு வரும் மே மாதம் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. டெண்டர் பெறப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எரிவாயு எடுக்கும் பணிகள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

இது இப்படியிருக்க இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் நடத்தப்பட்ட ஆய்விலும் எரிவாயு உள்ளதாக, பிரான்ஸை சேர்ந்த டோடா நிறுவனம் கண்டறிந்துள்ளது. அடுத்தக்கட்ட பணிகளை தீர்மானிப்பதில் பிரான்ஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. பிரான்ஸில் தேவாலயம் சமீபத்தில் தீவிபத்துக்குள்ளானது ஞாபகம் வருகிறதா?

இலங்கையில் சீனா ஏகப்பட்ட முதலீடுகளை செய்துள்ளது. எவனோ ஒரு பிரான்ஸ் கம்பெனிக்காரன் இலங்கையில் கால் பதிப்பதை சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. செய்த முதலீட்டுக்கு அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கும்தானே?

மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் உள்ளதையும் வெளிநாட்டு நிறுவனங்களே கண்டறிந்து உறுதிப்படுத்தின. கடலுக்கடியில் இருந்து கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய கிழக்கு நாடுகளில், ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் கால் பதித்த பின்னரே அங்கு பிரிவினைகள், கலவரங்கள், குண்டுவெடிப்பு, உயிரிழப்புகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள் நடைபெற்றன. இதைக் காரணம் காட்டி பெட்ரோலிய வளமுள்ள அரசுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வல்லரசுகள் களத்தில் இறங்கி கல்லா கட்டும்.

இலங்கை கடற்பரப்பில் இருந்து எரிவாயு எடுக்கும் பணியினை 2023 க்குள் ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய வளம் குறைந்து வருகிறது. இன்னொருபுறம் இலங்கையில் அபரிமிதமான இயற்கை எரிவாயு கண்டறியப்படுகிறது. மத்திய கிழக்கில் ஐ.எஸ். ஆதிக்கம் மட்டுப்படுகிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்கிறது. குறிப்பாக கிறிஸ்தவ பண்டிகையின்போது தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளது. 35 வெளிநாட்டினர்களும் பலியாகியுள்ளனர்.

ஆக இலங்கையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. உலகத்தில் எங்கெல்லாம் பாதுகாப்பு குறைபாடு உள்ளதோ அங்கெல்லாம் வல்லரசுகள் கால் பதிக்கும் அமைதியை நிலைநாட்டும் போர்வையில் தேவையான காரியத்தை சாதிக்கும்.

இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அடுத்து சீனாவும் உதவத் தயாராக இருப்பதாக செய்திகள் வரும்.

எப்படியோ இலங்கையில் குட்டையைக் குழப்பி குழப்பத்தை உண்டாக்கிவிட்டாயிற்று. இந்த குழப்பத்தில் மீன் பிடிக்கப்போவது அமெரிக்காவா? சீனாவா? சீனாவின் ஆதரவுடன் ரஷ்யாவா? என்பது போகப் போக தெரியும்.

குண்டுவெடிப்பில் பலியான அப்பாவிகளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

இரா.சுந்தரபாண்டியன்.

7 comments:

  1. இது பொய் கட்டடுரை
    இந்த முஸ்லிம் தீவிரவாதிகளின் இந்த கொலைகளுக்கு, இலங்கை முஸ்லிம்கள் மட்டுமே பொறுப்பு

    ReplyDelete
  2. எரிவாயுவிட்காக அப்பாவி உயிர்களை முதலிடுவது எவ்வகையில் நியாயம்?

    ReplyDelete
  3. வல்லரசுகலுக்கு இரட்டிப்புளாபம் ஆயுத விட்பனை கச்சாஎன்னை உயிர்நீத்த அனைவருக்கும் எனது ஆள்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  4. சரியான கருத்து ஐயா

    ReplyDelete
  5. Sindhika vendiya pathivu

    ReplyDelete
  6. இரா.சுந்தரபாண்டியன் நல்லதொரு யூகத்தை பதிவு செய்திருக்கிறார். இது உண்மையாகவும் க்கலாம்.



    கடந்த கால யுத்தமும் இதே நிகழ்வுதான். JR ஆட்சிக்காலத்தில் திருகோணமலை துறைமுகம் அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இவ் ஏற்பாடு இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எனக்கருதி இந்தியா ஏற்படுத்திய உள்நாட்டுப் பிரச்சினையே அது,

    ReplyDelete

Powered by Blogger.