Header Ads



தமிழ்த் கூட்டமைப்பினால் வழிநடத்தப்படும் இந்த, அரசாங்கத்தை விரைவில் விரட்டியடிக்க வேண்டும்

அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வழிநடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெனிவா யோசனைக்கு அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகள் இணை அனுசரணை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.

இலங்கையை கண்காணிக்க ஜெனிவாவுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவதை அரசாங்கத்திற்கு மறுத்து பேச முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தற்போதைய அரசாங்கத்தை வழி நடத்தி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இன்றி வரவு செலவுத்திட்டத்தை கூட நிறைவேற்ற முடியாது.

இதுதான் தற்போதுள்ள நிலைமை. ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு செல்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விசேட ஐ.நா ஆணையாளரை நியமிக்க வேண்டும் என்று தமிழ் கட்சிகள் இணைந்து கூறுகின்றன. வடக்கில் அலுவலகம் ஒன்றை திறக்குமாறு கோருகின்றன.

ஆறு மாதங்களுக்குள் அறிக்கையை வழங்குமாறு கோருகின்றன. ஜெனிவாவில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க பிரதிநிதிகளை அனுப்புவதை அரசாங்கம் நிராககரித்துள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதி தனது மூன்று பிரதிநிதிகளை அனுப்ப நேரிட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் தேசத்துரோக அரசாங்கம். முடிந்தளவு விரைவில் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இவர் சட்டத்துறையில் பேராசிரியராம்.ஆனால் அவருடைய பேச்சைப்பார்க்கும் போது சிறைச்சாலை ஜெயிலரின் அறிவுத்தரம்கூட இல்லை. இனி தமிழரசுக் கட்சியை ஆட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டு இவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்குமாறு கேட்கும் இந்த முன்னாள் மந்தி(ரி)யின் நிலைமைக்கு என்ன என்று கூறுவது.

    ReplyDelete

Powered by Blogger.