Header Ads



ஹக்கீமும், மனோவும் அமைச்சுக்களை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றார் ரணில் - கோபித்தபடி வெளியேறினார் மனோ

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று -19- மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையில் கடும் வாக்குவாதமொன்று இடம்பெற்றுள்ளது.

ஆளுங்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்று நடைபெற்றது.அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் -றிஷாத் பதியுதீன் தவிர இதர அனைத்து கட்சித் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அமைச்சரவையை விஸ்தரிப்பது குறித்து இதன்போது பிரதமர் தெரிவித்த கருத்தே கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் சிலருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சுப் பதவிகள் கிடைக்காத சிலருக்கும் புதிய அமைச்சுப் பதவிகளை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அதன்காரணமாக சில அமைச்சர்கள் குறிப்பாக உயர்கல்வியை கொண்டுள்ள ரவூப் ஹக்கீம் இந்து சமய அமைச்சை வைத்துள்ள மனோ கணேசன் ஆகியோர் சில விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டுமெனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதமருடன் முரண்பட்ட அமைச்சர் மனோ கணேசன் ,ஏற்கனவே அமைச்சர்கள் தம்து அமைச்சுக்களுக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில் திடீரென இப்படி கோருவது தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்துமெனவும் ஒரு சிலரை திருப்திப்படுத்தப் போய் அரசை ஆட்டம் காணச் செய்துவிட வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வாதம் முற்றிய நிலையில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த மனோ , ”மிஸ்டர் ப்ரைமினிஸ்டர்…நீங்கள் உங்கள் நண்பர் சுவாமிநாதனுக்காக பேசுகிறீர்கள்…மனோ கணேசனா சுவாமிநாதனா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள் ” என்று தெரிவித்துவிட்டு வெளியேறியதாக மேலும் அறியமுடிந்தது .

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அவசரக் கூட்டமொன்று இன்றிரவு நடைபெற்றதாகவும், அமைச்சரவை விஸ்தரிப்பு என்ற பெயரில் எந்த வீட்டுக் கொடுப்புக்களையும் செய்வதில்லையென இதில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அறியமுடிந்தது.

tamilan

1 comment:

Powered by Blogger.