Header Ads



கொஞ்சநேரம் தாமதித்திருந்தால், எங்கள் மூச்சு நின்றிருக்கும் - விமலின் கதறல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் பயணித்த, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள மின்தூக்கி (லிஃப்ட்) நின்றுவிட்டதால், அதற்குள் சிக்கிக்கொண்டிருந்த எம்.பிக்கள், சுமார் 15 நிமிடங்களுக்குப் பின்னர் வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாதவிவாதங்கள் வருமாறு,

விமல் வீரவன்ச: இன்று நாம், நாடாளுமன்ற லிஃப்டுக்குள் சிக்கிக்கொண்டோம். அதற்குள் குறிப்பிடப்பட்டுள்ள அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்ட போதிலும், 15 நிமிடங்களுக்குப் பின்னரே, நாம் வெளியேற்றப்பட்டோம்.

சபாநாயகர் கரு ஜயசூரிய: இந்த விடயத்துக்கு நான் வருந்துகிறேன். உடனடியாக, இது குறித்துத் தேடிப்பார்க்கிறேன்.

விமல் வீரவன்ச: வருத்தப்பட்டு பிரயோசனமில்லை என்றும் இன்னும் கொஞசநேரம் தாமதித்திருந்தால், எங்களது மூச்சு நின்றுபோயிருக்கும்.

தினேஸ் குணவர்தன: நான், 1983ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்துக்கு வந்தே, இப்படியான சம்பவமொன்றை, இன்று தான், நான் முதன்முறையாக எதிர்கொண்டேன். எங்களால், லிஃப்டுக்குள் சாகமுடியாது.

சரத் பொன்சேகா: மின்தூக்கியைப் பயன்படுத்த பயமாக இருந்தால், இனிவரும் நாள்களில், படிக்கட்டுகளில் ஏறி வாருங்கள். ஒருமுறையேனும் உடையாத இயந்திரங்கள் இல்லை.

No comments

Powered by Blogger.