Header Ads



கொழும்பில் பூசணிக்காய் திருவிழா - நாமும் பங்கேற்று விவசாயிகளுக்கு உதவுவோம்...!

கொழும்பில் நடைபெறும் பூசணிக்காய் திருவிழாவினை பார்வையிட பெருந்திரளான மக்கள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

கொழும்பு ஸ்ரீன்பாத்தில் Pumpkin Famers Festival என்ற பூசணிக்காய் திருவிழா இன்று  -22- ஆரம்பமானது.

பூசணிக்காய் விவசாயிகளின் கவலையை தீர்க்கும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த திருவிழாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பூசணிக்காய்கள் விற்பனை செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பூசணிக்காயில் தயாரிக்க கூடிய உணவுகள் பலவற்றை இதன்போது அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய புடிங், பூசணி கேக், பூசணி உருண்டை ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.

கல்கிஸ்சையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பிரதான சமையல் கலைஞனரினால் திருவிழாவுக்கான விசேட உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பூசணிக்காய் திருவிழாவினை காண உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

இவ்வருடம் பூசணிக்காய் செய்கை அதிகரித்துள்ள நிலையில் அவற்றை விற்பனை செய்யமுடியாது விவசாயிகள் தடுமாற்றமடைந்துள்ளனர். இவர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடனும் பூசணிக்காய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் இது ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.