Header Ads



மலேசிய பிரதமருக்கு, இஸ்ரேல் கண்டனம்

இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் மலேசியாவிற்குச் செல்ல தடை விதித்ததற்காக மலேசியப் பிரதமர் மஹதீர் முஹமட்டுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது

கடந்த வாரம் டொக்டர் மஹதீர், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு நிகழ்ச்சிகளை மலேசியா இனி ஏற்று நடத்தாது என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மஹதீர் யூதர்களுக்கு எதிராகக் கடுமையான வெறுப்பை வெளிப்படுத்துவதாக இஸ்ரேல் கண்டனம் தெரிவித்தது. டோக்கியோவில் 2020இல் நடைபெறவிருக்கும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான நீச்சல் தகுதிச் சுற்று மலேசியாவில் இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவிருந்தது.

இஸ்ரேலிய வீரர்கள் அதில் கலந்து கொள்வதால் அதனை ஏற்று நடத்தப் போவதில்லை என்று மலேசியா தெரிவித்தது. அது குறித்து இஸ்ரேல், அனைத்துலக உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் குழுவிடம் முறையீடு செய்துள்ளது.

மலேசியா அதன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தகுதிச் சுற்று வேறொரு நாட்டில் இடம்பெற வேண்டும் என்று அது கூறியது.

இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவு இல்லாத நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இஸ்ரேலியக் கடவுச்சீட்டைக் கொண்டு மலேசியாவிற்குள் நுழைய முடியாது.

பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய சர்ச்சையில் மலேசியா பலஸ்தீனத் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

3 comments:

  1. Yes.. Return the stolen land of Palestine back to its people and get back to your area.. Then Israel will be respected and allowed to do so.

    IF not simply..

    Malaysia will not welcome land thieves.

    ReplyDelete
  2. Yes good move by Malaysia dont allow them

    ReplyDelete

Powered by Blogger.