Header Ads



"திறந்து பார்க்காதீர்கள்" - எச்சரிக்கிறது இலங்கை மத்திய வங்கி

ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் பெயரில் மோசடி செய்து, நாட்டின் முதன்மை நிதி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, போலியாக மின்னஞ்சல் பரிமாற்றல்கள் இடம்பெற்று வருவதகா, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தால், அவ்வாறான எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தப் போலி மின்னஞ்ஞல் சம்பந்தமாக, அனைத்து நிதி நிறுவனங்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் அறிவித்தல் எனத் தெரிவித்து மின்னஞ்சல் ஏதும் கிடைத்தால், அந்த மின்னஞ்சலை திறந்துப் பார்க்கவேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமும் நிதி நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.