Header Ads



மாவனல்லை சிலை உடைப்புக்கும், புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்பு - சிங்கள ஊடகங்கள் அறிவிப்பு

பொலிஸ் ஆதாரங்களை மேற்சொல்லி, சிங்கள ஊடகங்கள் சில இன்று -19- சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன என முஸ்லிம் கவுன்சில் தலைவரும்,  நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.

அதன்படி மானெல்ல சிலை உடைப்புக்கும் - புத்தளம் வெடிபொருள் மீட்புக்கும் தொடர்புள்ளதென சுட்டிக்காட்டியுள்ளன.

மாவனல்லையில் அண்மையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் தென்னம் தோப்பு ஒன்றில் மறைந்திருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கு ஏற்ப, விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்த 20 முதல் 25 வயதிற்கு இடைப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தை தொடர்ந்து பரிசோதித்த போதே புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

100 கிலோகிரோம் வெடிபொருட்கள் அடங்கிய 3 பெரல்களும், நைட்டிக் திரவியம் அடங்கிய 6 பெரல்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

99 டெட்டனைட்டர்களும், வாயு ரைஃபில் ஒன்றும், ஒரு வேட்டைத் துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 7 தோட்டாக்களும் நவீன ரக கெமரா ஒன்றும் மடிக்கணணி ஒன்றும் தமிழ் மற்றும் அரபு மொழியில் அச்சிடப்பட்ட புத்தகங்களும் வீசா அனுமதிச்சீட்டு உள்ளிட்ட பல பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை தற்போதைய இச்சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு செயலாளருடன் தொடர்புகளை ஏற்படுத்தி மேலதிக விபரங்களை அறிய முயற்சிப்பதாக என்.எம். அமீன் தெரிவித்தார்.

1 comment:

  1. We have to send all these unruled elements to gallow in order to maintain the law and order of the country.

    ReplyDelete

Powered by Blogger.