Header Ads



மைத்திரியின் பெயர், கின்னஸ் புத்தகத்திற்கு, ஆச்சரியமிக்க சாதனைகள் இதோ...!

ஜனாதிபதி சிறிசேனவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட வேண்டிய அளவுக்கு அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதற்கான தேவைகளை அவர் பூர்த்தி செய்துள்ளார். 

அவற்றில் சில கீழ்வருமாறு.

மூன்று வருடங்களினுள் ஜனாதிபதிக்கான செயலாளர்கள் மூன்று பேரை நியமித்த ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

மூன்று வருடங்களினுள் ஜனாதிபதி ஆளணித் தலைமை அலுவலர்கள் மூன்று பேரை நியமித்த ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

மூன்று வருடங்களினுள் பிரத்தியேக செயலாளர்கள் நான்கு பேரை நியமித்த ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

மூன்று வருடங்களினுள் மூன்று தடவை பிரதமர்களை நியமித்த ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

மூன்று வருடங்களினுள் பாதுகாப்புச் செயலாளர்கள் நான்கு பேரை நியமித்த ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

ஜனாதிபதி தலைமை வகிக்கும் கட்சிக்கு மூன்று வருடங்களினுள்  செயலாளர்கள் ஐந்து பேரை நியமித்த ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

தனது அரசாங்கத்தின் அமைச்சரவையை மூன்று வருடங்களினுள் மூன்று முறை நியமித்த ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

மூன்று வருடங்களினுள் அமைச்சரவை மாற்றங்கள் மூன்றினை மேற்கொண்ட ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் நிறுவனங்களுக்கு மூன்று வருடங்களினுள் அடிக்கடி தலைவர்களை நியமித்த ஒரே ஜனாதிபதியாக உள்ளார். 

அதில் இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் கூட்டுத்தாபனத்திற்கு ஆறு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். 

புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். 

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். 

ஆளுனர்கள் மூன்று சுற்றுக்களில் மாற்றப்பட்டனர். 

நாட்டின் அரசியலமைப்பை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றத்தினால் ஒருமித்த தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரே ஜனாதிபதியாகவும் சிறிசேன காணப்படுகிறார்.  
    
நன்றி – அனித்தா பத்திரிகை
தமிழில் - அபூபத்ஹான்       

1 comment:

Powered by Blogger.