Header Ads



திருடர்களை பிடிப்பதில் நாங்கள், தோல்வியடைந்து விட்டோம்

அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பது சிறந்தது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியின்படி 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல், மோசடிளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் மிகப் பெரிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹாவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களுடன் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் திருடர்களை பிடிப்பதாக கூறினார். இன்று வரை எவரையும் கைது செய்யவில்லை. திருடர்களை பிடிப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை மக்கள் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்தினர். அதற்காகவே எங்களுக்கு ஆதரவு வழங்கினர். எனினும் அது நடக்கவில்லை. எனினும் அதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

கடந்த நான்கு ஆண்டுகள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தில் கொள்ளை சம்பவங்கள் நடந்திருந்தால், அவற்றை கண்டுபிடித்து மக்களிடம் கையளிக்க வேண்டியது அவசியம். அதற்கு முன்னர் கொள்ளையடித்த திருடர்களை பிடிக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானது.

மக்கள் எம்மிடம் பலவற்றை கோரினர். ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறும் திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரினர். எனினும் அரசாங்கம் என்ற முறையில் நாங்கள் அதில் தோல்வியடைந்தோம்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதற்கான பொறுப்பு இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். ஆணைக்குழுவை நியமித்து கடந்த காலத்தில் நடந்த கொள்ளையடிப்புகள் குறித்து விசாரித்தால், நான் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Since you have selected a wrong man in 2015, all aspects have been failed.

    ReplyDelete

Powered by Blogger.