Header Ads



முஸ்லிம்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல, மதமே முக்கியம் - புத்தளத்தை வட மாகாணத்துடன் இணைக்க வேண்டும்

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்' வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இணைப்பை ஏன் கோருகின்றோம்?

"வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் தமிழ் மொழியுடனும் தமிழர்களுடனும் தமிழ் கலாசாரத்துடனும் தொடர்புபட்டவர்கள்.

ஆனால் அண்மைக் காலங்களில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் குடியேற்றப்பட்டவர்கள் அப்படியில்லை. துவேஷம் மிக்கவர்கள். தெற்கில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். பலர் குற்றவாளிகளாக நீதி மன்றங்களினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காணப்பட்டவர்கள்.

ஆகவே வட கிழக்கு பிரிக்கப்பட்டால் சிங்கள ஆதிக்கம் பெருகும். வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழர்கள் கையில் இருந்து பறிபோய்விடும்.

1881-ம் ஆண்டில் தமிழர்கள் 60 சதவிகிதமும் முஸ்லீம்கள் 35 சதவிகிதமும் சிங்களவர்கள் 5 சதவிகிதமும் கிழக்கில் இருந்தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சதவிகிதத்துக்குப் பெருகினார்கள்.தமிழர்கள் 60 சதவிகிதத்தில் இருந்து 54 சதவிகிதத்துக்குக் குறைந்தார்கள்.சிங்களவர்களில் மாற்றம் இருக்கவில்லை. 5 சதவிகிதமாகவே இருந்தார்கள்.

முஸ்லீம் மக்களின் பெருக்கம் வழக்கமாகவே மற்றைய இனங்களிலும் பார்க்கக் கூடியதென்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். பல் தார மணங்கள் அம்மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.

அவர் மேலும் கூறுகையில், "ஆனால் 1946 தொடக்கம் சிங்கள மக்களின் தொகை மிக விரைவாகப் பெருகத் தொடங்கியது. 1981ல் தமிழர்களின் ஜனத்தொகை 42 சதவீதமாகக் குறைந்தது. முஸ்லீம்களின் ஜனத்தொகை 32 சதவீதமாகக் குறைந்தது. சிங்களவரின் ஜனத்தொகை 5 சதவிகிதத்தில் இருந்து 25 சத விகிதத்திற்குப் பெருகியது. இதேவாறு பெருக்கம் நிலைத்திருந்தால் 2031ல் சிங்களவர்கள் ஜனத்தொகை 50 சதவிகிதமாக ஏறியிருக்கும். போர் வந்ததால் அவர்கள் ஜனத் தொகை குறைந்தது. முஸ்லிம்கள் தொகை 35 சதவிகிதத்திலேயே நின்றது. ஆனால் தமிழரின் ஜனத் தொகை வருடா வருடம் குறைந்து கொண்டு போகிறது.

ஆகவே வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக அவசியம் ஆகின்றது. இல்லையேல் அவர்களின் மொழி, காணிகள், அவர்களின் அடையாளங்கள், பாரம்பரியங்கள் எல்லாமே அழிந்து விடுவன.

முன்னர் இலங்கையில் வாழ்ந்த பறங்கியர் இப்பொழுதெங்கே? என் வாழ்நாளிலேயே அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளார்கள். சிங்களம் வந்ததும் அவர்கள் நாட்டை விட்டுப் போய் விட்டார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரர்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல. அவர்தம் மதமே அவர்களுக்கு முக்கியம்.

வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக முக்கியம் என்ற நிலையில் முஸ்லீம் சகோதரர்களும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் மீது கவனமாகவே இருக்கின்றார்கள். அதே நேரம் வட கிழக்கு இணைந்தால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள் என்ற பயமும் அவர்களுக்கு உண்டு" என்றும் தெரிவித்துள்ளார் விக்னேஸ்வரன்.

"மட்டக்களப்பில் ஒரு பகுதியையும், ஊவா மாகாணத்தில் இருந்த பதியத்தலாவ, மகா ஓயா போன்றவற்றின் நிலப்பரப்பையும் உள்ளடக்கியே 1956ல் அம்பாறை என்ற ஒரு மாவட்டம் நடைமுறைக்கு வந்தது. கிழக்கினுள் சிங்கள மக்களை உள்நுழைக்க இது உதவியது. இதனால் கிழக்கின் சிங்கள மக்களின் செறிவு கூடுதலாக்கப்பட்டது.

சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் இணைப்பை சாதகமாகப் பார்ப்பது போல் தெரியவில்லை. அவர்கள் இணைப்பு வேண்டாம் என்பதால் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய இடங்களை மற்றவர்களிடம் தூக்கிக் கொடுத்து விடமுடியாது.

வட கிழக்கில் சிங்கள எகாதிபத்தியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவதைக் கண்டும் நாங்கள் கண் மூடிக் கொண்டு இருக்க முடியாது.

அதைவிட தமது மதத்தில் கூறியபடி "பல்கிப் பெருகிட வேண்டும்" என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் எமது சகோதர இனப் பெருக்கத்தையும் நாம் அசட்டை செய்ய முடியாது.

இங்கு கூறப்படும் அனைத்தையுமே மனதில் கொண்டால் தமிழ் மக்கள் வடகிழக்கு இணைப்பைக் கேட்பதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.

வடகிழக்கை எவ்வாறு இணைக்கலாம்?

"நாம் எமது கட்சி அடிப்படையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களுக்கு தனியொரு அலகை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் தமிழ் அலகுடன் அல்லது முஸ்லிம் அலகுடன் சேரலாம். தமிழ் மொழிக்கே இரு அலகுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும். முஸ்லிம் தமிழ் அலகுகளுக்கிடையில் வரும் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குத் தேவையான அலகில் சேரவழிவகுக்க வேண்டும்.

இன்னுமொரு யுக்தியைக் கையாளலாம். அம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியையும் லகுகலை உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் ஊவா மாகாணத்துடன் சேர்க்க வேண்டும்.

அதே போல் கோமரன்கடவல உதவி அரசாங்க அதிபர் பிரிவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரித்து வடமத்திய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த விதத்தில் கிழக்கில் குடிகொண்டிருக்கும் 75 சதவிகித சிங்கள மக்களை அவர்தம் மக்களுடன் சேர்த்து விடலாம். அதன் பின்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம்.

இதனால் ஏற்படும் காணி நஷ்டத்தைப் புத்தளம் மாவட்டத்தை வடமாகாணத்துடன் சேர்ப்பதன் மூலம் ஈடு செய்யலாம்.

கண்டிய மன்னர் காலத்தில் புத்தளம் தெமள ஹத்பத்து என்றே அழைக்கப்பட்டு வந்து. "தமிழர் வாழ் ஏழு பற்றுக்கள்" என்பதே அதன் பொருள். புத்தளம் வாழ் மக்கள் தமிழ்ப் பேசும் மக்களே. இணைப்பின் பின் பொது எல்லைகள் இல்லாத ஒரு அலகாக பாரம்பரிய முஸ்லிம் இடங்கள் வடகிழக்கினுள் ஒரு அலகாக்கப்படலாம்.

நான் நண்பர் அஷ்ராவுடன் இது பற்றி எல்லாம் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கருத்துக்கள் பரிமாறியுள்ளேன்.

அவ்வாறான ஏற்பாடுகள் சிங்களவருக்கும் நன்மை பயக்கும். முஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும். கிழக்கில் தமிழர்களும் பாதுகாக்கப்படுவர்.

ஆகவே வடகிழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் தனித்துவத்தைப் பேணவும் அத்தியாவசியமானது.

வடகிழக்கு இணையாவிட்டால் கிழக்கில் இன அழிப்புக்கு காலக்கிரமத்தில் இடம் உண்டு. அழிக்கப்படும் இனம் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இனமாகவே இருக்கும்" என விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. உங்களது குறிப்பில் பல உண்மைகள் இருந்தாலும் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு சிறிதும் குறைந்ததல்ல தமிழ் மேலாதிக்கம். எனவே எவ்வாறு உங்களை நம்புவது..? இன்னொரு வழியில் கேட்பதாயின் ஏன் நாம் உங்களைச் சந்தேகிக்கக் கூடாது..?

    இவ்வினாக்களுக்குரிய விளக்கத்தை நீங்கள்தான் முன்வைக்க வேண்டும் முன்னாள் நீதியரசரே!

    ReplyDelete
  2. I won’t be surprised if this guy ask for the amalgamation of the entire Sri Lanka with the Northern Province.

    ReplyDelete
  3. மொழியும், இனமும், இடமும் பிரித்திடும் மக்களை
    மொழியும் ஓரிறை உயர் மறையே இணைத்திடும்!

    ReplyDelete
  4. கள்ளச்சாராயம் குடித்து ஆண்மை இழந்து போவதாலும், கண்ட கண்ட பெண்களிடம் சென்று வீணாக்குவதாலும், கருத்தடை செய்து கொள்வதாலும் நீங்கள் பிள்ளைகளை பெறாமல் இருப்பதட்கு முஸ்லிம்கள் பலியா? ஹிந்து மதத்தில் பலதாரமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முருகனுக்கு இரண்டு மனைவி, தசரதனுக்கு மூன்று மனைவி etc.... முதலில் நீர் ஹிந்துவா? அல்லது தமிழனா? முதலில் உனது சமூகத்தை சீர்செய் மற்ற இனத்தவர் தானாக முன்வந்து உதவி செய்வார்கள். உலகில் எந்த நாட்டிலும் யாருடனும் சமாதானமாக வாழவிரும்பாத இனந்தானடா நீங்கள்....

    ReplyDelete
  5. கள்ளச்சாராயம் குடித்து ஆண்மை இழந்து போவதாலும், கண்ட கண்ட பெண்களிடம் சென்று வீணாக்குவதாலும், கருத்தடை செய்து கொள்வதாலும் நீங்கள் பிள்ளைகளை பெறாமல் இருப்பதட்கு முஸ்லிம்கள் பலியா? ஹிந்து மதத்தில் பலதாரமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முருகனுக்கு இரண்டு மனைவி, தசரதனுக்கு மூன்று மனைவி etc.... முதலில் நீர் ஹிந்துவா? அல்லது தமிழனா? முதலில் உனது சமூகத்தை சீர்செய் மற்ற இனத்தவர் தானாக முன்வந்து உதவி செய்வார்கள். உலகில் எந்த நாட்டிலும் யாருடனும் சமாதானமாக வாழவிரும்பாத இனந்தானடா நீங்கள்....

    ReplyDelete
  6. இவனை போல் குடித்துவிட்டு கனவு காண எவனாலும் முடியாது. என்ன செய்ய காலமெல்லாம் கேட்டு கேட்டு சிங்களவனிடம் பிச்சையாக கூட ஒன்றும் கிடைக்கவில்லை இப்படி கணவாவது கண்டுகொள்ளட்டும். உங்களுக்கு இருக்கும் ஒரே தெரிவு கள்ள தோணியில் இந்தியாவிற்கு சென்று அங்கு ஒரு நாட்டை பெற்றுக்கொள்வது தான். சிங்கள அரசாங்கம் இணங்கினாலும் கிழக்கில் ஒரு அடியை கூட வடக்கு தமிழ் பயங்கரவாதிகளுக்கு கொடுக்க முஸ்லிம்கள் நாங்கள் இணங்கமாட்டோம். இதில் உச்சகட்ட நகைச்சுவை சிங்களவனிடம் புத்தளத்தையும் கேட்க போகின்றானாம். அடேய் விக்கி குடித்துவிட்டு பேட்டிகொடுப்பது இதுவே கடைசியாக இருக்கட்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  7. “நா காக்க வேண்டும் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன்”

    இலங்கை முஸ்லிம்களுக்கு மொழி பொருட்டல்ல”எனும் நீதியரசர் சி.வி. விக்னேஷ்வரன் அவர்களின் கூற்று என்னை வியப்பிலாழ்த்தியுள்ளது. வடமாகாண முதலமைச்சரின் அறிக்கை தமிழ்த் தேசியவாதத்தின் அடிநாதத்தையே கேள்விக்குட்படுத்துகிறது.

    தந்தை செல்வாவின் தமிழ்ததேசியம் தமிழ்பேசும் மக்களுக்கான தாயகக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்னாள் நீதியரசர் மறுத்துரைக்கிறாரா என்பதை முதலில் அவர் தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம்கள் தமிழை வளர்க்கவில்லை என்று கூறுவதால் முஸ்லிம்கள் எத்தகைய தகுதியை இழக்கிறார்கள் எனும் தீர்ப்பினை அவர் அவசியம் விளக்கியாக வேண்டும். இதன் மூலம் அவர் எதனை நாடுகின்றார்?

    தமிழ் முஸ்லிம் உறவு வலுப் பெற வேண்டும் என்று மிக நேர்மையாக அண்மைக்காலங்களில் குரல் கொடுத்துவரும் சித்திலெப்பை ஆய்வுப் பேரவை இது குறித்து தனது பலத்த கண்டனத்தையும் இத்தால் தெரிவித்துக் கொள்கிறது.

    இனிவரும் காலங்களில் முன்னாள் முதலமைச்சரின் கருத்துக்களை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுப்பதற்கு அவரது கருத்தை அவர் வாபஸ் பெற வேண்டும்.
    அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை களைந்து களத்தில் நிற்க வேண்டிய பக்குவம் நிறைந்த வளவாளராகவோ நீதியரசராகவோதான் நாம் உங்களை எதிர்பார்த்தோம். ஓர் ஆன்மீக நாட்டம் கொண்ட பழுத்த ஆளுமையால் எவ்வாறு இத்தகைய பொறுப்புணர்ச்சி அற்ற விதத்தில் கருத்துக்களை விதைக்க முடியும்?

    " யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது " என்று நாடாளும் மன்னனுக்கு அறிவுரை கூறிய சான்றோரின் தமிழ் இலக்கிய மரபினை நாங்கள் பேணிப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம். சாத்வீகம் நிரம்பிய சைவமரபின் திராவிட உள்ளடக்கம் வல்லாதிக்க மனாபோவம் கொண்ட இந்துத்துவா சிந்தனையிலிருந்தும் முற்றிலும் வேறானது என்பதை இங்கு நான் தெளிவாகச் சுட்டிக்காட்ட விளைகிறேன்.

    தென்னிந்தியாவில் மிக நேர்மையாகப் பேசப்பட்டுவரும் தமிழ்த்தேசியமும் திராவிடவாதமும் ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிரானதாவே இயங்கிவரும் அதேவேளை அவ்வியங்கியல் முஸ்லிம் சமூகத்தை உள்ளடக்கிய ஒருபோராட்டமாகும். மேலும் இலங்கைச்சூழலில் அதனை கருத்துச் சிதைவின்றி முன்னெடுக்க வேண்டிய தேவையை நாம் அனைவரும் உணரத்தலைப்பட வேண்டியள்ளது என்பதை ஞாபகமூட்ட விளைகிறேன்.

    பத்றுத்தீன் புலவரின் இலக்கியப்பணிகளை அன்றைய வடபுல தமிழ் இலக்கிய உறவுகள் அங்கீகரிக்க மறுத்தபோது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை நடத்த வேண்டிய தேவையினை உருவாக்கியது.

    முதலமைச்சர் தமிழ்பேசும் மக்களுக்கான இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்று பேசியபோதிலும் தந்தை செல்வாவின் தந்தைமை உணர்வுடன் பேசவில்லை என்பது அவரது மொழியாடலில் தொனிக்கிறது.

    உண்மையில் முஸ்லிம்களுக்கு மொழி முக்கியமல்ல என்ற அவரது வாதம் இணைந்த வடக்கு கிழக்கினை அவர் அடிப்படையில் ஆதரிக்கவில்லை என்றே கூறவேண்டும்.
    ஏனெனில் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் இணைப்பு சாத்தியமில்லை என்பதை அறியாத நீதியரசர் அல்ல சி.வி.விக்னேஷ்வரன் அவர்கள்.

    ஆகவே அவர் தமிழ் மக்களையும் ஏமாற்றும் அரசியல் முன்னெடுப்புக்கே தயார் ஆகிறார் என்பது புலனாகிறது.

    அல்லது இத்தகைய கருத்து மோதல்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையே விரிசல்களை தோற்றுவித்து மீண்டும் இனச்சுத்திகரிப்பினை நிகழ்த்தி ஒரு வன்முறை கலாசாரம் நிறைந்த ஆட்சியை நிறுவ இவர் வழிசமைக்கிறாரா என்பதே நம் கண் முன்னே விரியும் மிகப்பெரிய வினாவாகும்.

    முஸ்லிம்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல என்று கூறும் இவருக்கு இலங்கையின் முதல் தமிழ் நாவல் அறிஞர் சித்தி லெப்பை படைத்த அசன்பே சரிதம் என்பது
    நினைவில் இல்லையா?

    2000 தமிழ் இலக்கிய நூல்களை திரட்டிய அல்லாமா உவைஸ்அவர்களை ஓரம் கட்டுவது தர்மம் ஆகுமா?பண்டாரவன்னியன் காவியத்தையும் எல்லாள காவியத்தையும்
    படைத்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஒரு காவியப்புலவனாகப் புலப்படவில்லையா? காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் படைத்த பன்டாரவன்னியன் காவியத்துக்கு நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் வழங்கிய வாழ்த்துரை உதட்டளவில்தானா?

    தமிழ் கற்கும் உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களை வழங்கிய பேராசிரியர் நுஃமானை இவர் ஏற்க மறுக்கிறாரா? அவலை நினைத்து உரலை இடிப்பதால் எதுவும் நன்மை நேர்ந்து விடாது.

    சட்டத்தரணி மர்சூம் மௌலானா
    தலைவர்
    சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை

    ReplyDelete

Powered by Blogger.