Header Ads



தப்லிக் இஜ்திமாவின் இறுதிநாளில் மக்கள் வெள்ளம், 10 இலட்சம் பேர் திரண்டனர், அமீர் ஆத் மௌலானா சிறப்பு துஆ


-திருச்சியிலிருந்து சாகுல் ஹமீத்-

திருச்சி அருகே லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட மாநாடு சனிக்கிழமை  தொடங்கியது.   இறுதி நாளான 3-வது நாளான திங்கட்கிழமை -28- இறுதி  மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. இதில் 10 லட்சத்திற்கு மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள். இறுதி நாளான மதியம் புதுதில்லியில் உள்ள தப்லீஃக் இயக்கத்தின் அமீர் ஹஜ்ரத் ஜீ ச ஆத் மௌலானா உலக அமைதிக்காவும் மற்றும் சமய நல்லிணக்கத்திற்கும், உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் எவ்வித பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறப்பு து ஆ ஓதினார் பின்னர் மாநாடு நிறைவு பெற்றது.இதில் பல்வேறு மார்க்க அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினர். 

முஸ்லிம்கள் மாநாட்டை (இஜ்திமா) இந்த ஆண்டு திருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்கள் தலைமையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கின. இதற்காக திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரவை பகலாக்கும் வகையில் உள்ளது. 

இறுதி நாளான 3-வது நாளான திங்கட்கிழமை இறுதி  மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. இதில் 10 லட்சத்திற்கு மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள். இறுதி நாளான மதியம் புதுதில்லியில் உள்ள தப்லீஃக் இயக்கத்தின் அமீர் ஹஜ்ரத் ஜீ ச ஆத் மௌலானா 
உலக அமைதிக்காவும் மற்றும் சமய நல்லிணக்கத்திற்கும், உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் எவ்வித பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறப்பு து ஆ ஓதினார் பின்னர் மாநாடு நிறைவு பெற்றது.இதில் பல்வேறு மார்க்க அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினர். 
இந்த துஆவில் கலந்து கொள்வதற்காக 10 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர்கள்  முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டு து ஆ வில் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அந்தந்த மாவட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது. உணவு தயார் செய்யும் பணியும் 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகிறார்கள். உணவு தயார் செய்வதற்கு தேவையான சமையல் பொருட்கள் வைப்பதற்கு தனியாக இடம் அமைத்து, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில், இறைவன் கட்டளையை நிறைவேற்றி இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை முறையை பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும், மறுமை வாழ்வை நினைத்து அதற்கு தகுந்தாற்போல் எப்படி வாழ வேண்டும், சகோதரத்துவம், மனிதநேயம், மனிதாபிமானம், நல்லொழுக்கம், ஒற்றுமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, அனாதைகளை ஆதரித்தல், ஏழை-எளியோருக்கு உதவுதல், மகளிருக்குரிய உரிமை மற்றும் சலுகைகளை இஸ்லாமியம் அருளியபடி முறையாக கொடுத்து அவர்களை கவுரவப்படுத்துவது, குழந்தை வளர்ப்பு முறை பற்றி போதித்தல், வணிகத்தில் நேர்மை, கொடுக்கல்-வாங்கலில் நேர்மை, மது இல்லா வாழ்வு, உயரிய பண்பாட்டோடு வாழ்வது, இழிவு பேசுவதை தவிர்த்து வாழ்வது குறித்து தினமும் சொற்பொழிவு நடைபெற்றது.


4 comments:

  1. சிறப்பு துவா

    ReplyDelete
  2. அது என்ன சிறப்பு துஆ?

    ReplyDelete
  3. All this money could have been used for a good deeds better than this such as widow support; orphan support; or education.
    ..priority has gone wrong ..
    Individual spiritualism is important but Islam does not allow waste of money in this scale ..
    Islamic orginsie human act and actions in order of priority

    ReplyDelete
  4. UNKNOWN, try to know below given info's and change your hidden name into a KNOWN one.

    ஓர் முஸ்லிமுக்கும்   அஃதல்லாதோருக்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையே.  தொழுகை இல்லாதவனுக்கு இஸ்லாத்தில் எவ்விதப் பங்கும் கிடையாது. 

    அவனுக்கு இஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ பற்றிஃஃப் பேச எவ்வித அருகதையும் கிடையாது.

    இவர்கள் அப்படியானவர்களை வீடு வீடாகச் சென்று அழைத்து வந்து ஈமானிய பயிற்சி கொடுத்து உண்மையான முஸ்லிம்களாக்குகின்றார்கள். 

    தவிரவும், அவ்வாறு முஸ்லிம்கள் ஆகின்றவர்களும்  தம் போன்றிருந்த ஏனைய தொழாதவர்களையும் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து உதவ இஸ்லாமிய பயிற்சி பெறுகின்றார்கள்கள்.

    இந்த இஜ்திமாவில் இருந்தும் அவ்வாறு இஸ்லாமியப் பயிற்சி பெறும் அவர்கள் அப்பணியை உலகளாவிய ரீதியில் எடுத்துச் செல்வார்கள்.

    அசலில் அவர்கள் தம்மைப் சீர்திருத்திக் கொள்வதற்காகவுமே இவ்வாறு தம் சொந்த பொருள் நேரச் செலவுகளை மேற்கொண்டு ஈடுபடுகிறார்கள்.

    ஓர் குறிப்பிட்ட எல்லைக்கப்பால் முஸ்லிம்களின் பின் ஏனையோர் விடயத்திலும் அவர்கள் தம் முயற்சியை மேற்கொள்வர்.

    காரணம், இஸ்லாம் அனைத்து மனிதர்களின் விமோசனத்துக்குமான வெற்றிகரமான நடைமுறை  மார்க்கம் என்பதோடு அனைவரையும் படைத்த ஏக இறைவனால் அருளப்பட்டதாகும்.

    இங்கு கருத்துக் கூறுபவர்கள், முதலில் முஸ்லிம் என்ற பெயரோடு தொழாமல் இருப்பவர்கள் யாரையாவது அறிந்தால்  இவர்களது கவனத்துக்குக் கொண்டு வரலாம். 

    அதன் பின் தாம் செய்ய நினைத்திருக்கும் சமூக நலப் பணிகளை அவர்களில் இருந்து தொடங்கலாம்.

    ஓர் குறிப்பிட்ட சிலரால் மாத்திரம் சமுதாயத்திலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை முன்வைத்து விட முடியாது அல்லவா. 

    எனவே, சமூகப் பணியைக் கூட்டுப் பொறுப்பாகக் கருதி தத்தம் சக்திக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்றவாறு ஒவ்வொருவரும்  தம்மாலான பணிகளை ஒற்றுமையாகப் புரியட்டும். 

    இன்றோ நாளையோ என்றிருக்கும் இவ்வுலக வாழ்விலும், அழிவும் முடிவும் இல்லாத அடுத்த வாழ்விலும் ஒவ்வொருவரும் மகத்தான வெற்றி பெற முயற்சி செய்வோமாக.

    எல்லாவற்றுக்கும் ஓர் முயற்சி தேவைப்படுவது போன்று சுவர்க்க வாழ்விற்கும் ஓர் முயற்சி தேவைப்படுகின்றது என்பதை அனைவரதும் உள்ளத்தில் இருத்திக் கொள்வோமாக.

    ReplyDelete

Powered by Blogger.