Header Ads



சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறார்

உடல்நலக் குறைவால் இன்று -13- கொழும்பிலுள்ள லங்கா (அப்பலோ) தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றக் கலைப்பு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனதார வரவேற்றுள்ளார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும் என நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

அதற்கமைய தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது. இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கின்றேன். நாட்டில் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்ய இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவும்.

எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளிக்க வேண்டும். தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை அவர் உடன் நிறுத்த வேண்டும்.

இதேவேளை, அரசமைப்பின் பிரகாரம் நடவடிக்கைளை அவர் முன்னெடுக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள அணியினரிடம் அரசாட்சிப் பொறுப்பை அவர் வழங்கவேண்டும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

உடல்நலக் குறைவால் இன்று காலை கொழும்பிலுள்ள 'லங்கா' (அப்பலோ) தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்த தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், உடல் நிலையில் பாரதூரமான எந்த தன்மையும் இல்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

3 comments:

  1. சம்பந்தன் ஐயா மிகவிரைவில் குணமடைந்து கடமைக்குத் திரும்ப எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. MORE THAN LAST FIVE WEEKS SAMPANTHAR WAS VERY BUSY DEALING WITH CURRENT POLITICAL PROBLEM.HE FACED A VERY TIGHT SITUATION ONE SIDE HE WANTS TO PLEASE HARD CORE ACTORS LIKE CARD BOARD PRABAKARAN KNOWN AS KILINOCHI SRITHARAN AND OTHER SIDE PEOPLE WIMAL BOORUWANSA AND UDAY GONPULLE IN BETWEEN INDIA AND FOREIGN ENVOYS.HE MANAGED ALL THIS WITH GREAT RESPONSIBILITY AS LEADER OF OPPOSITION.GOD BLESS HIM GOOD HEALTH AND LONG LIFE.

    ReplyDelete
  3. We are praying for your full recovery. May God bless you.

    ReplyDelete

Powered by Blogger.