Header Ads



ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது

Breaking news 

  ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு சற்றுமுன்னர் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியானால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்குகரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தை கலைத்திருந்தார்.

இந்த மனுக்களில் பொறுப்புக் கூறத்தக்கவர்களாக ஜனாதிபதி, அப்போது ஜனாதிபதியனால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனையடுத்து பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன ஆகியோரடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழுவால் அம் மனுக்கள் மீதான விசாரணை ஆராயப்பட்டது.

இதனையடுத்து பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை  இடை நிறுத்த, கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்தது.

இந் நிலையில் பிர­தம நீதி­ய­ரசர் நலின் பெரே­ராவின் கீழ் பிரி­யந்த ஜய­வர்­தன, பிர­சன்ன ஜய­வர்­தன, புவ­னேக அலு­வி­ஹார, விஜித் மலல்­கொட, சிசிர டி ஆப்று, முர்து பெர்­ணான்டோ ஆகிய எழுவர் கொண்ட நீதி­யர்­சர்கள் குழாம் இம்­ம­னுக்கள் விசா­ரிக்­கப்பட்டு வந்தது.

அத்துடன் கடந்த 07 ஆம் திகதி கூடிய உயர் நீதிமன்றம், வர்த்தமானி தொடர்பில் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டது.

இந் நிலையிலேயே  இன்று -13- மாலை இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. This is call Uneducated President. you are really qualified to be a farmer only not for ruling the country

    ReplyDelete
  2. அடுத்த கட்டமாக நாட்டை இவ்வளவு பாதாளத்துக்கு தள்ளிவிட்ட ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும் தீர்மானம் அவசியம்.

    ReplyDelete
  3. Not to home. Send this mental disordered President for treatment in Angoda.

    ReplyDelete

Powered by Blogger.