Header Ads



ஐ.தே.க. க்கு உதவிசெய்யும் மகிந்தவும், மைத்திரியும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் எமது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரியளவில் உதவி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் தற்பொழுது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளேயோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணியிலோ எவ்வித முரண்பாட்டு நிலைமைகளோ கிடையாது.

கட்சியின் பிரதமராக செயற்பட வேண்டியது யார் என்பது தொடர்பில் கட்சி மிகவும் தெளிவான தீர்மானம் எடுத்துள்ளது.

கடந்த ஒரு மாதமும் ஒரு வாரமுமான காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரியும், பாரிய உதவிகளைச் செய்துள்ளார்.

எனவே கட்சிக்குள் நிலவி வந்த சிறு சிறு முரண்பாடுகள், குழப்ப நிலைமைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

கட்சி முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பலம்பொருந்தியதாக மாற்றமடைந்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மை பலம் நாடாளுமன்றில் உள்ளது என்பதனை எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றில் உறுதிப்படுத்துவோம்.

ரணிலுக்கு நம்பிக்கை வெளியிடும் வகையிலான தீர்மானமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும்.

இந்த யோசனையை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே சமர்ப்பித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அனைத்து குழப்ப நிலைமைகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு சொல்ல வேண்டுமென அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.