Header Ads



உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஜனாதிபதிக்கு மிகவும் ஆபத்தானது

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனாதிபதிக்கு மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதியின் தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்றின் தீர்ப்பையடுத்து பிரதமர், அமைச்சரவை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இதன் பின்னரும் அரசியலமைப்பை மீறும் வகையில் ஜனாதிபதி செயற்படகூடாது. அவ்வாறு முயற்சி செய்வாராக இருந்தல் மேலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பும் ஜனாதிபதிக்கு மிகவும் ஆபத்தானது. அவர் அரசியலமைப்பை மீறியுள்ளதாகவே உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதாகவே ஏழு பேர்கொண்ட நீதியரசர்கள் குழாம் இன்று தீர்ப்பளித்துள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.