Header Ads



நாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி குறித்த ஊடகவியலாளரின், அயல் வீட்டில் உணவின்றி தவித்த நாய் ஒன்றை காப்பாற்றுவதற்கு ஊடகவியலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதற்காக அவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து நாயை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் அன்றைய தினமே பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பேற்படுத்திய ஷிரந்தி ராஜபக்ச, நாயை காப்பாற்ற உதவிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளர் ஷிரந்தி ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராகும்.

சட்டத்திற்கமைய கடமைகளை நிறைவேற்றி நாய் ஒன்றின் உயிரை காப்பாற்ற உதவி பொலிஸ் அதிகாரிகளுக்கு, மஹிந்தவின் பிரதமர் அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறு ஷிரந்தி ராஜபக்ச அழுத்தம் கொடுத்துள்ளார் என ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

Sharmini Serasinghe I

Last Thursday, 5th of December, I had to save a dog and 7 cats locked up without any food or water in a vacant house for 5 days by its owners, next door to mine. They had done this to take revenge on the tenants (French citizens) while they were with their 6 year old child in hospital, with dengue.
I went to the police made an entry and the police were extremely obliging. I finally managed to get the dog and cats out, with the help of several police officers. That same evening, Mahinda Rajapaksa's wife, Shiranthi, on behalf 
of the owners of the house (her stooges, Shalini Dias and her mother Yvonne Dias), had called the OIC of the Police station and demanded that he immediately transfer all the Police officers who helped me to save the lives of these poor starving animals!!!

No comments

Powered by Blogger.