Header Ads



மகிந்தவின் விலகல், எப்படி நடந்தது..? அமெரிக்கன் காரி கூறும் காரணம்

மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக நேற்றுமாலை, தகவல் வெளியானதை அடுத்தே, அவர், சிறிலங்கா மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், இது நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள் சமந்தா பவர், “இது சிறிலங்காவின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்று கூறியுள்ளார்.

“இதிலிருந்து சிறிசேன செய்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிளவுகள் ஆழமாக முன்னர் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கி நகர வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பதிவுகளில் சமந்தா பவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

No comments

Powered by Blogger.