Header Ads



பாராளுமன்றப் பகுதியில் பதற்றம் - பொலிஸார் குவிப்பு

பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் வீதியில் தற்போதுஅமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதி நியமித்த புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும் புதிய அமைச்சரவைக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சபை கூடுமென சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், பாராளுமன்றப் பகுதியில் கூடியுள்ள இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றநிலைய தோன்றியுள்ள நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பிற்காக பெருமளவில் பொலிஸார்  குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. சாக்குக் கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சனாதிபதியின் அந்த துரும்புகள் இப்போ எங்கே? சனாதிபதி எங்கே இருக்கின்றாா்.

    ReplyDelete
  2. Enough fighting for Parties and Colors.
    Let the LAW and order work in Country.
    Let all Parties Fight for right..
    Its time for all CIVILIANS /CITIZENS TO stay CALM/PEACE.
    "CALM DOWN'

    ReplyDelete

Powered by Blogger.