Header Ads



"மகிந்த பெரும்பான்மை இருப்பதாக கூறினார், இப்போது அதை நிரூபிக்க முடியாமல் போயுள்ளது"

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ள போது பெரும்பான்மை இருப்பதாக கூறினார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்தவுடனே ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து இவர் பதவி விலகியிருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜித  கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“சபையில் இன்று நடந்த சம்பவம் கவலையை தருக்கின்றது. இன்று நடந்ததைப் பார்கின்ற போது அவர்கள் அனைவரும் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது.

இவர்களின் நடவடிக்கையினை பார்த்து சபாநாயகர் அஞ்சிவிடுவார் என்று எண்ணினார். எனினும், தமது உயிரை அர்ப்பணித்து ஜனநாயகத்தை பாதுகாத்தது போன்று எமது சபாநாயகரும் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்தவுடனே ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து இவர் பதவி விலகியிருக்க வேண்டும். அதைவிடுத்து அராஜகத்தை கையில் எடுக்கக் கூடாது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.