Header Ads



இலங்­கை­யி­லுள்ள சவூதி தூத­ரகம், விதித்­துள்­ள நிபந்­தனை

இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் மற்றும் உம்ரா பய­ணங்­களை மேற்­கொள்ளும் பய­ணிகள் இலங்­கையின் விமான சேவை­யான ஸ்ரீலங்கன் விமா­ன­சேவை மற்றும் சவூதி அரே­பியா விமான சேவையை மாத்­தி­ரமே பயன்­ப­டுத்த வேண்டும் என இலங்­கை­யி­லுள்ள சவூதி அரே­பிய தூத­ரகம் நிபந்­தனை விதித்­துள்­ளதால், ஹஜ், உம்ரா பய­ணி­களும், ஹஜ், உம்ரா முகவர் நிலை­யங்­களும் பல அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

ஹஜ் முகவர் சங்­கங்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும், முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்­கு­மி­டையில் கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்­றுக்­காலை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இக்­கூட்­டத்தின் போதே குறிப்­பிட்ட முறைப்­பாடு முன்­வைக்­கப்­பட்­டது.

ஹஜ், உம்ரா பய­ணங்­களை மேற்­கொள்ளும் இலங்­கை­யர்கள் கடந்த காலங்­களில் குவைத், கட்டார், ஓமான், டுபாய் ஆகிய நாடு­களின் விமா­ன­சே­வைகள் மற்றும் கல்ப், பிளை டுபாய் ஆகிய விமா­ன­சே­வை­களை தங்­க­ளது விருப்­பத்தின் படி தெரி­வு­செய்யக் கூடி­ய­தாக இருந்­தது. அத்­தோடு குறை­வான விமானக் கட்­ட­ணங்­களை அற­விடும் விமா­ன­சே­வை­களை தெரிவு செய்ய முடி­யு­மாக இருந்­தது. சவூதி தூத­ர­கத்தின் புதிய நிபந்­த­னை­யினால் ஸ்ரீலங்கன் மற்றும்  சவூதி அரே­பியா விமான சேவையில் பய­ணிக்க அதிக கட்­ட­ணங்­களைச் செலுத்த வேண்­டி­யுள்­ள­தாக முகவர் ஒருவர் தெரி­வித்தார்.

மேலும் ஒரு சில முக­வர்கள் ஸ்ரீலங்கன் மற்றும் சவூதி அரே­பியா விமா­ன­சே­வையின் விமான பய­ணச்­சீட்­டு­களை ஏற்­க­னவே கொள்­வ­னவு செய்து வைத்­தி­ருந்து ஹஜ் பருவ காலங்­களில் கூடுதல் விலைக்கு கறுப்புச் சந்­தையில் விற்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

நேற்­றைய கூட்­டத்தில் ஹஜ் முகவர் நிய­ம­னங்கள் மற்றும் ஹஜ் கோட்டா பகிர்­வுகள் தாம­த­மின்றி உரிய காலத்தில் இடம்­பெற வேண்­டு­மெ­னவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில், திணைக்­க­ளத்தின்  குறிப்பிட்ட விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரி எம்.ஐ.எம்.முனீர் மற்றும் அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம், இலங்கை ஹஜ் முகவர் சங்கம் மற்றும் மௌலவி ஹஜ் முகவர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
-Vidivelli

3 comments:

  1. If you do not have the ability to raise enough money for your trip... It will not necessary.. Saudi Arabia plays key role in international decision-making.

    ReplyDelete
  2. சவூதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ள சுதந்திர வர்தக சட்டங்கள் உடன்படிக்கைகளுக்கு இது பொருந்துமா என்பது ஆராயப்பட வேணும்.

    ReplyDelete
  3. issuing umra visa is the only duty of the embassy of saudi arabia. travel arrangements should be left with the travel agents. this action can make people doubt that some embassy officials are on the payroll of sri lankan and saudia airlines which is bad for their countries.

    ReplyDelete

Powered by Blogger.