இலங்கையிலுள்ள சவூதி தூதரகம், விதித்துள்ள நிபந்தனை
இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் இலங்கையின் விமான சேவையான ஸ்ரீலங்கன் விமானசேவை மற்றும் சவூதி அரேபியா விமான சேவையை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் நிபந்தனை விதித்துள்ளதால், ஹஜ், உம்ரா பயணிகளும், ஹஜ், உம்ரா முகவர் நிலையங்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
ஹஜ் முகவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்குமிடையில் கலந்துரையாடலொன்று நேற்றுக்காலை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தின் போதே குறிப்பிட்ட முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
ஹஜ், உம்ரா பயணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்கள் கடந்த காலங்களில் குவைத், கட்டார், ஓமான், டுபாய் ஆகிய நாடுகளின் விமானசேவைகள் மற்றும் கல்ப், பிளை டுபாய் ஆகிய விமானசேவைகளை தங்களது விருப்பத்தின் படி தெரிவுசெய்யக் கூடியதாக இருந்தது. அத்தோடு குறைவான விமானக் கட்டணங்களை அறவிடும் விமானசேவைகளை தெரிவு செய்ய முடியுமாக இருந்தது. சவூதி தூதரகத்தின் புதிய நிபந்தனையினால் ஸ்ரீலங்கன் மற்றும் சவூதி அரேபியா விமான சேவையில் பயணிக்க அதிக கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளதாக முகவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு சில முகவர்கள் ஸ்ரீலங்கன் மற்றும் சவூதி அரேபியா விமானசேவையின் விமான பயணச்சீட்டுகளை ஏற்கனவே கொள்வனவு செய்து வைத்திருந்து ஹஜ் பருவ காலங்களில் கூடுதல் விலைக்கு கறுப்புச் சந்தையில் விற்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்றைய கூட்டத்தில் ஹஜ் முகவர் நியமனங்கள் மற்றும் ஹஜ் கோட்டா பகிர்வுகள் தாமதமின்றி உரிய காலத்தில் இடம்பெற வேண்டுமெனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திணைக்களத்தின் குறிப்பிட்ட விடயத்துக்குப் பொறுப்பான அதிகாரி எம்.ஐ.எம்.முனீர் மற்றும் அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம், இலங்கை ஹஜ் முகவர் சங்கம் மற்றும் மௌலவி ஹஜ் முகவர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
-Vidivelli

If you do not have the ability to raise enough money for your trip... It will not necessary.. Saudi Arabia plays key role in international decision-making.
ReplyDeleteசவூதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ள சுதந்திர வர்தக சட்டங்கள் உடன்படிக்கைகளுக்கு இது பொருந்துமா என்பது ஆராயப்பட வேணும்.
ReplyDeleteissuing umra visa is the only duty of the embassy of saudi arabia. travel arrangements should be left with the travel agents. this action can make people doubt that some embassy officials are on the payroll of sri lankan and saudia airlines which is bad for their countries.
ReplyDelete