Header Ads



மைத்திரிக்கு 2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, சந்தர்ப்பத்தை வழங்குவது இன்னும் தீர்மானிக்கவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பத்தை வழங்குவதா இல்லையா என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நடந்துக்கொள்ளும் விதத்தில் அது சம்பந்தமாக தீர்மானிக்கப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் நடத்தையை கவனத்தில் கொண்டே கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எந்த நம்பிக்கையும் இல்லை என டுவிட்டரில் பதிவிட்டதாகவும் தமது தரப்பினருடன் ஜனாதிபதி நன்றாக செயற்படுகிறார் என்பதால், அந்த விமர்சனம் தற்போது செல்லுப்படியற்றது எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் என்னை சிறையில் அடைத்ததை நான் மறக்கவில்லை. அதனை யார் செய்தனர் என்பது தெரியாது. ஜனாதிபதி தற்போது எடுத்துள்ள தீர்மானத்தை மாற்றாமல் இருப்பது இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமானது எனவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

நாட்டில் நிலவும் அராஜக நிலை டிசம்பர் 7 ஆம் திகதி வரை தொடருமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள நாமல், அராஜக நிலைமை மாற்ற வேண்டுமாயின் பொதுத் தேர்தலை நடத்துவதை தவிர மாற்று வழியில்லை எனக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.