Header Ads



நீதியரசர்கள் வராததால், பரபரப்பான உயர் நீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் இன்னமும், அமர்வுக்கு வரவில்லை.

பிற்பகல் 3.30 வரை நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, மாலை 5 மணி வரை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், குறிப்பிட்ட நேரத்துக்கு, 45 நிமிடங்களுக்கு மேலாகியும் நீதியரசர்கள் வரவில்லை.

இதனால் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் 502ஆம் இலக்க அமர்வு அறையில் காத்திருக்கின்றனர்.

இதனால், பரபரப்பு மேலும் அதிகரித்து, பின்னர் நீதியரசர்கள் வரவே சற்றென அந்த பரபரப்பு அடங்கிப்போனது.

No comments

Powered by Blogger.