Header Ads



இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு பற்றி, பொன் அரு­ணா­ச்சலம் எழுதிய அறிக்கை

சேர் பொன் அரு­ணா­ச்சலம்  இவர் 1853 செப்­டம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். தகப்­பனார் பெயர் கேட் முத­லியார் யு. பொன்­னம்­பலம் இவ­ரு­டைய சகோ­தரர் சேர் பொன் இரா­ம­நா­த­னாவார். இவர் இலங்கை குடி­யேற்ற நாட்டு செய­லா­ள­ராக ஒரு­முறை இருந்­த­வரும் 1901 இல் குடி­சன மதிப்­பீட்­டுக்கு பொறுப்­பாக இருந்­த­வரும் பதி­வாளர் நாய­க­மா­கவும் 1927ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்­கி­ரஸை ஆரம்­பித்­த­வரும் இலங்­கையின் தேசிய வீரர்­களில் ஒரு­வ­ரான சேர் பொன் அரு­ணா­சலம்  இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாறு தொடர்­பாக பின்­வரும் கருத்­துக்­களை வெளி­யிட்டார்.

பெரிய பிரித்­தா­னி­யா­வி­னதும் அயர்­லாந்­தி­னதும் அரச ஆசிய கழக நிலைய அறிக்கை தொகுதி 1 பக்கம் 537, 1827ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 03ஆம் திகதி வாசிக்­கப்­பட்ட அறிக்கை வரு­மாறு:

பன்­னெ­டுங்­கா­லத்­துக்கு முன்­னரே இலங்­கையில் அர­பிகள் இருந்­தார்கள். முகம்­மது நபி அவர்கள் பிறப்­ப­தற்கு எத்­த­னையோ நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் அவர்கள் இங்கு வர்த்­த­கர்­க­ளாக வந்­தனர். அவர்­க­ளது தொழிலில் எவ்­வ­ளவு ஆர்­வ­மாக இருந்­தார்கள் என்றால், இந்­திய சாக­ரத்தில் வர்த்­த­கத்தை நடத்திக் கொண்ட அதே­ச­மயம் அப்­பி­ர­தே­சத்தில் நடந்த மர­ணத்தை விளை­விக்கும் கடற்­சண்­டை­யிலும் மார்க் அந்­தோ­னியின் கப்­பல்­க­ளுக்கு படை­களை கொடுத்­து­தவிக் கொண்டும் இருந்­தனர்.

10 ஆம் நூற்­றாண்டு தொடக்கம் 15ஆம் நூற்­றாண்டு வரை அர­பிகள் வர்த்­த­கத்தில் கிழக்கே இணை­யற்ற எஜ­மா­னர்­க­ளாக விளங்­கினர். ஏற்­று­மதிப் பொருட்­களை உற்­பத்தி செய்த எல்லா நாடு­க­ளிலும் தங்கள் வர்த்­தக நிலை­யங்­களை நிறு­வினர். அவர்­க­ளு­டைய கப்­பல்கள் சோபா­லா­வி­லி­ருந்து பாப் அல் மந்திப் வரை­யிலும் ஏட­னி­லி­ருந்து சுமாத்­திரா வரையும் எல்லா துறை­மு­கங்­க­ளுக்கும் சென்­றன. இலங்கை கரை­யோ­ரங்­களில் வதியும் இந்த முஅர்ஸ் சுறு­சு­றுப்­பான துணிச்சல் மிகுந்த வீரர்­களின் வழித்­தோன்­ற­லாவர். அவர்கள் கலப்­பற்ற அற­பிகள் இல்­லா­விட்­டாலும் முகம்­மது நபி அவர்­களின் மதத்தை பின்­பற்றும் கலப்பு மணம் செய்­து­கொண்ட அரபு மூதா­தை­யரின் வழித்­தோன்­ற­லாகும். மரக்­கல மினிஸ்ஸு அல்­லது கட­லோ­டிகள் என்றும் சிங்­கள புனை­பெயர் அவர்­களின் ஆரம்­பத்­தையும் தொழி­லையும் விளக்­கு­கி­றது.

எந்தக் காலத்­திலும் பொருட்­களை உற்­பத்தி செய்­ப­வர்­க­ளாக அல்­லாது வர்த்­தகம் மூலம் ஏற்­று­மதி செய்­வ­தி­லேயே கரி­ச­னை­யாக இருந்­தனர். அவர்கள் ஆப­ரண வணி­க­ரா­கவும் மாணிக்கக் கல் விற்­பன்­ன­ரா­கவும் முத்­துக்­களை சேக­ரிப்­ப­வ­ரா­கவும் இருந்­தனர். துறை­மு­கங்­களில் பண்­ட­க­சா­லை­களை கட்டி கப்­பல்­களால் துறை­மு­கங்­களை நிரப்பி செல்­வத்­தையும் இன்­பப்­பொ­ருட்­க­ளையும் மாணிக்­கக்­கற்கள், சாயம் தரும் மரங்கள், வாசனைத் திர­வி­யங்கள் யானைத் தந்­தங்கள் என்­ப­வற்றை சீனா­வுக்கும் பார­சீக குடா­விற்கும் அனுப்பி வைத்­தனர்.

1901ஆம் ஆண்டு இலங்கை குடி­சன மதிப்­பீட்டு அறிக்­கையில் 3ஆம் அத்­தி­யாயம் 27ஆம் பந்­தியில் 10 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து 15 ஆம் நூற்­றாண்டு வரை இலங்கை தீவின் வர்த்­தகம் அவர்­களின் கைக்கு மாறி­யது என்றும் யானை, மாணிக்கம், வாச­னைத்­தி­ர­வியம், முத்து போன்­ற­வற்றை யூப்­ரடிஸ் நதிக்கு அப்பால் கொண்டு  செல்­ப­வர்­க­ளா­கவும் சீனர்­க­ளுடன் பண்­ட­மாற்று செய்­வோ­ரா­கவும் இருந்­தனர். எனவும் அதே அத்­தி­யாயம் 31 ஆம் பந்­தியில் ஸ்பையினை ஆண்ட அதே முஅர்ஸ் என அழைக்­கப்­பட்ட வியா­பார நுணுக்கம் தெரிந்த அதே பெயரைக் கொண்ட அவர்­களின் வழித்­தோன்­றல்­களே இலங்கைச் சோன­கர்­க­ளாகும் எனவும்,

மேலும் 10 ஆம் அத்­தி­யாயம் 34 ஆம் பந்­தியில் 10 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து 15 ஆம் நூற்­றாண்டு வரை அற­பி­களே கீழைத்­தேய கடல்­க­ளி­னதும், வர்த்­த­கத்­தி­னதும் எஜ­மா­னர்கள். போர்த்­துக்­கே­ய­ரிடம் அகப்­படும் வரை இலங்­கையில் மிகுந்த செல்­வாக்கை செலுத்­தினர். இக்­கா­லப்­ப­கு­தியில் இலங்­கை­யி­னதும் இந்­தி­யா­வி­னதும் கரை­யோ­ரங்­களில் குடி­யே­றினர். அங்கு வசித்த தமி­ழர்­களை கலப்புத் திரு­மணம் செய்­தனர் எனவும்,

மேலும் 10ஆம் அத்­தி­யாயம் 35ஆம் பந்­தியில் அவர் சோன­கர்கள் எந்த வகை­யிலும் புத்திக் கூர்மை குறைந்­த­வர்கள் அல்ல. ஆனால் அவர்கள் மேல் நாட்­டுக்­கல்­வியில் அக்­கறை காட்­ட­வில்லை. அராபி பாஷா இலங்கை வந்­த­போதும் துருக்­கி­யரின் உடையை அணிந்­த­னரே ஒழிய கல்­வியில் நாட்டம் செலுத்­த­வில்லை. மத்­திய காலத்தில் ஐரோப்­பா­வி­னதும், ஆசி­யா­வி­னதும் பெரும்­பா­லான பகு­தியில் இருள் கவ்விக் கொண்டு இருந்த போது கல்வியிலும் நாகரிகத்திலும் ஒளி விளக்கு மங்காது மேலோங்கி இருந்தனர்.

மேலும் தேசாதிபதி அவர்கள் கலந்து கொண்ட சட்டசபை கூட்டம் ஒன்றில் இலங்கையின் அறபி வழி சோனகர்கள் புத்திக் கூர்மை வாய்ந்த ஒரு கூட்டத்தினர் எனவும் பேசினார்.

(இலங்கைச் சோனகர் இன வரலாறு ஒரு திறனாய்வு, பக்கம் 17,18,19,20,21 ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ்)

வி.எம். மொஹமட் லாபீர், உதவிக் கல்விப் பணிப்பாளர்,

வலயக் கல்வி அலுவலகம், மூதூர்.

3 comments:

  1. Good work br. Lafir! carry on, May Allah Blessing you!

    ReplyDelete
  2. படிப்புக்கு ஏற்ற அறிவு. அறிவுக்கு ஏற்ற படைப்பு. படைப்புக்கு ஏற்ற சொல் மற்றும் வசனநடை. வசனநடைக்கேற்ற ஆக்கம்.

    ReplyDelete
  3. முதல் மனிதனும் முஸ்லிமுமான ஆதம் (அலை) காலம் முதலே இந்நாட்டில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதனை, ஆய்வு பூர்வமாக நிரூபித்துச் சென்று  கொண்டிருக்கும்  வரலாற்றுப் பாதையின் இன்னொரு சிலிர்க்க வைக்கும் மைல்கல்தான் அறிவியலாளர் முஹம்மது லாபீர் அவர்களது இந்த வரலாற்றுத் தொகுப்பு.

    பேருவளை நகரில்தான் உலகின் முதலாவது வர்த்தக முதலீட்டு வலயம் இருந்தது என்ற சம்பிக்கவின் வாதமும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று இங்குள்ள சீனங்கோட்டையின் சர்வதேச மாணிக்கக்கல் வர்த்தக மத்திய நிலையம்,  இன்றைய உலக ஜாம்பவானான சீன வர்த்தகர்களாலேயே புதன், சனி  தினங்களில் களை கட்டிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.

    அச்சர்வதேச வர்த்தக மத்திய நிலையம் முஸ்லிம்களின் ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் உள்ளது நம்மவர்களின் வாதங்களுக்கு மென்மேலும் வலுவூட்டுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.