Header Ads



ரணிலை ஏன் நீக்கினேன்..? மைத்திரி கூறும் காரணங்கள்...!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்தமை, 

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடைய செய்தமை, 

நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தமை 

உட்பட பல விடயங்களின் அடிப்படையில் பிரதமரை பதவி நீக்க தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை அரசியலமைப்பின் 42(4) சரத்திற்கு அமைய, இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் பிரதமராக தங்களை நியமித்த தான், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில், பிரதமர் பதவியிலிருந்து தங்களை நீக்குவதாக இதனூடாக அறியத் தருகின்றேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.