Header Ads



இலங்கையில் பொது போக்குவரத்தில் 90 வீத பெண்கள், பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர் - ஐ.நா.

இலங்கையில் பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 90 வீதமாவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளவதாக ஐ.நா சனத்தொகை நிதியம் புதிதாக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

வன்முறை, வேறுபாடுகளுக்கு உள்ளாவது, வறுமை என்பதால் புரிந்து கொள்ளப்பட்ட பிரச்சினைகள், இலங்கையில் போலவே உலக நாடுகளிலும் பெண்கள் பாலியல் ரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் போதுமான தரவுகள் இல்லை.

எனினும் இந்த பிரச்சினைகள் பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகளுக்கு மிகவும் பரீட்சயமானவை என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் ஆண் பயணிகள் சிறிய பெண் பிள்ளைகளை தொடுவது, அவர்கள் மீது சாய்ந்து கொண்டிருப்பது போன்றவற்றை தான் நேரில் பார்த்திருப்பதாக 23 வயதான வருணி மானேல் தெரிவித்துள்ளார்.

பேருந்து நடந்துனர்களும் சிறிய பெண் பிள்ளைகளை பேருந்தில் ஏற்றும் போது தேவையற்ற வகையில் தொடுவதையும் பார்த்துள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் இடங்கள், தொழில் புரியும் இடங்கள், வசிக்கும் இடங்கள் வரை இந்த தொந்தரவுகள் இருப்பதா ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வில் 15 வயது முதல் 35 வயதான 2500 பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் உட்படுத்தப்பட்டுள்ளனர். நேர்காணல்கள், கேள்விகள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சாதனங்களிலேயே பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் அதிகளவான அனுபவத்தை கொண்டுள்ளனர். வாய்மொழி மூலமான ஆபாசமான அவமதிப்பு உள்ளாக்கப்படுவது. தன்னிச்சையான தொடுகை. இவற்றில் உடல் ரீதியான பாலியல் தொந்தரவுகளே அதிகம்.

74 வீதமான பெண்கள் மற்றும் சிறிய பெண் பிள்ளைகள் தாம் வேண்டுமென்றே பாலியல் ரீதியான தொடுகைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

ஆண்களே தம்மை இவ்வாறான பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகியதாக 90 வீதமான பெண்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமக்கு ஏற்படும் அவமானம் மற்றும் அச்சம் குறித்து ஆய்வின் போது பெண்கள் விபரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆய்வறிக்கையிவ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. This is very true. Many women are subjected to sexual harassment by the men while travelling on buses. We should have women only buses and mixed gender buses like in India.

    ReplyDelete

Powered by Blogger.