Header Ads



5000 ரூபா நாணயத்தாள், ரத்துச் செய்யப்பட வேண்டும்

ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை ரத்து செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விமலசூரிய தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் இன்றைய தினம் -16- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக 5000 ரூபா நாணயத் தாள்களை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இறக்குமதிகளை வரையறுப்பதனை விடவும் அரசியல்வாதிகளின் நன்மதிப்பினை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் செலவுகள் குறைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் கறுப்பு பணத்தை வெளிக் கொணரும் நோக்கில் நிதி அமைச்சராக கடமையாற்றிய என்.எம். பெரேரா 100 மற்றும் 50 ரூபா நோட்டுக்களை ரத்து செய்திருந்தார் எனவும் அதே விதமாக 5000 ரூபா தாளையும் குறைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

வழிபாட்டுத் தளங்கள், அரசியல்வாதிகள் போன்ற தரப்புக்களிடம் பாரியளவில் ஐயாயிரம் ரூபா நாணயத்தாள் காணப்படுவதாகவும் கொள்கலனில் நிரப்பும் அளவிற்கு பணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நாட்டின் பொருளாதார மற்றும் நாணய மதிப்பு வளர்ச்சி நாட்டின் உற்ப்பத்திகளை ஏற்றுமதி செய்யும் பொறி முறையில் மட்டுமே உள்ளது

    இதை சிந்தித்து இதற்கான திட்டங்களை வகுக்காமல் நாணய தாள்களை
    முடக்க வேண்டும் என உளருவது உலக மகா முட்டாள் தனம்

    எமது நாட்டு அரசு உற்ப்பத்தி தொழிற்ச்சாலைகளை உருவாக்கி உற்பத்தி பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் மக்களிடம் வரி வசூலித்து அரசியல் நடத்துவதை முற்றாக ரத்துச் செய்யும் வரை எமது நாட்டு பொருளாதாரமும் வளராது எமது நாட்டின் நாணயமும் தொடர்ந்து டாலருக்கு நிகராக மட்டுமல்ல எதிர்காலத்தில் சோமாலியா போன்ற நாட்டுகளின் நாணயத்துக்கு நிகராகவும் வீழ்ச்சிடைந்து கொண்டே போவது உறுதி

    ReplyDelete

Powered by Blogger.