Header Ads



2019 இல் பயணிக்ககூடிய சிறந்த நாடுகள் பட்டியலில், உலக நாடுகளை பின்தள்ளி இலங்கை முதலிடம்


2019ஆம் ஆண்டில் பயணிக்க கூடிய சிறந்த நாடுகள் பட்டியலில் உலக நாடுகளை பின்தள்ளி இலங்கை முதலிடம் பிடித்துள்ளது.

Lonely Planetஇன் சாகச நிபுணர்கள் வெளியிட்ட 2019ஆம் ஆண்டில் பயணிக்க கூடிய சிறந்த நாடுகள் பட்டியலில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அவ்வாறு பெயரிடப்பட்ட 10 நாடுகளில் முதல் இடத்தில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

உலகின் சூடான காலநிலை கொண்ட நாடுகள், 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா தளம், சிறந்த நகரங்கள் போன்ற பட்டியலை சாகச நிபுணர்கள் கொண்ட Lonely Planet என்ற சுற்றுலா பயண வழிகாட்டி வெளியிடுகின்றது.

இந்த பட்டியலில் உலகின் சிறந்த நகரமாக டென்மார்க்கின் Copenhagen என்ற நகரம் பெயரிடப்பட்டுள்ளது. உலகின் சிறந்த பிராந்தியமாக இத்தாலியின் Piedmont பிராந்தியம் தெரிவாகியுள்ளது.

“இலங்கையில், சூரியன் சமநிலையான கணத்தை கொண்டிருக்கும் அத்துடன் சூரியனின் மாற்றங்கள் விரைவாக நடக்கும். அத்துடன் பல தசாப்தங்கள் நடந்த உள்நாட்டு போரின் பின்னர், தற்போது நாடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடும்பங்கள், விலங்குகள், சுற்றுலா பயணிகளுக்கு ஆரோக்கிய தேவைகள் மற்றும் அனைத்து விலையிலும் பொருத்தமான உணவுகள் பெற்று கொள்ளும் வசதிகள் இலங்கை உள்ளது என்” Lonely Planet தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டில் பயணிக்க கூடிய சிறந்த நாடுகளின் பட்டியலுக்கமைய ஜேர்மன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சிம்பாவே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

பனாமா, கிர்கிஸ்தான், ஜோர்தான், இந்தோனேசியா, Belarus, Sao Tome, Principe மற்றும் Belize ஆகிய நாடுகள் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.