Header Ads



சஜீத் பிரேமதாச ஜனாதிபதியானால், ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும்

அமைச்சர் சஜீத் பிரேமதாச ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மீறாவோடை தமிழ் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 130வது மாதிரிக் கிராமமான சுவாமி விபுலானந்தர் கோட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டுத் தொழிற்சாலை, அரிசி ஆலை, ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

அரசியல் உரிமை என்பது பேச்சுவார்த்தை மூலமாக பேசப்பட்டு வந்தாலும், பொருளாதார உரிமை என்கின்ற இந்த அபிவிருத்திகளை தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நீங்கள் முன்வர வேண்டும்.

நீங்கள் ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும். பாரபட்சமின்றி சேவைகள் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மறைந்த ஜனாதிபதி பிரேமதாச கடந்த காலத்தில் 200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்கி, பல இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியதை நாங்கள் மறக்கவில்லை.

எனவே நீங்களும் வறுமையில் இருந்து மக்கள் மீள வேண்டும் என்பதற்கு தொழிற்சாலைகளை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.

2 comments:

  1. முன்னையகாலத்து அரசியல் வாரிசுகள் வராமல் புதிய ஆட்கள் ஏன் நம்ம நாட்டில் இல்லையா?

    ReplyDelete
  2. நல்ல விடயம். ஆனால் அவ்வாறாக உருவாக்கப் படுகின்ற தொழிற்சாலைகளுள் சிலவற்றிற்கு முஸ்லிம்கள் உரிமையாளர்களாக இருந்தால் அதனை திறக்கவிடும் அல்லது தொல்லை செய்யாதிருக்கும் மனநிலை உங்களிடம் வந்துவிட்டதா?

    ReplyDelete

Powered by Blogger.