Header Ads



"இதான் எங்கள், வெளிநாட்டு பெருநாள்"

பிறையை பார்க்கும் முன்னே பெருநாளுக்கான உடுப்பை ஒரு மாதத்துக்கு முன்னே பார்த்தவர்கள் நாங்கள் இன்று பிறையை பார்த்து விட்டோம்
ஆனால் இன்னும் உடுப்பை பார்க்க வில்லை இதான் எங்கள் வெளி நாட்டு வாழ்கை

எங்கள் ஊரில் உள்ள எல்லா பள்ளிகளிலும் தக்பீர் சொல்லி தக்பீரால் ஊரே அதிரும் பாரு  அந்த நொடி என்னிடம் கேட்கமலே என் ரோமம்கள் 90° இல் நின்று என் சந்தோஷத்தை பரைசாற்றும் பாரு அடேங்கப்பா   
ஆனால் இன்று இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் நண்பனின் whatsapp status யை பார்த்துதான் நாளை பெருநாள் என்பதே நினைவுக்கு வருகிறது 

எங்கள் ஊரில் தலை பிறை தென்பட்டு விட்டதாம் என்ற அந்த கணம் இருக்கிறதே அட டா  எனது ஊரின் குறுக்கு சந்திகளில் உன்னால் முடிந்தால் குறுக்கருத்துதான் பாரன் இது போக எனது ஊரின் பெரிய பள்ளியின் முன்னால் உள்ள மெயின் விதியின் நெருசல்கள்களை கண்ணால் பாத்ததுன்டா 
எத்தனை அழகுகள்  இதெல்லாம் எங்களுக்கு வெறும் advance பெருநாள் சந்தோஷக்கள் தான் இந் சந்தோஷத்துக்கு உன் pearl qatar area யை சமர்ப்பணம் செய்தாலும் ஈடாகாது

நாளை பெருநாளாம் என்ற அந்த தகவல் காதில் அடைந்ததும் எனது வீடு தடம் புரளும் காட்சி இருக்கிறதே ஐயையோ அதை வர்ணிக்க ஒரு பொழுது போதாதய்யா 
உம்மாவுக்கு மூத்த சம்மந்தக்காரிக்கு மொதல் வட்டிலப்பம் செய்யுரயா இல்ல ரெண்டாவது சம்மந்தகாரிக்கு செய்யுரதா என்ற பரபரப்பு  .......
உம்மம்மாக்கு கோழியை மொதல்  சமைக்கிறயா  இல்ல இறைச்சிய சமைக்கிறயா என்ற பரபரப்பு ..........
தங்கச்சிக்கு மொதல் காலையிலே தொழ போடு போர நம்ம அபாயாவே அயன் பண்ணுரதா இல்ல கானகாட்டு படுத்துர தம்பிட உடுப்ப இப்பயே அயன் பண்ணி வைக்கிறயா என்ட பரபரப்பு........
மத்த தங்கச்சி எடுத்த கிட்டுக்கு சாய்ந்தமருது தொட்டு மருதமுனை வரை தேடியும் மெச்சாகுர போல சோல் கிடைக்கல்ல இனி எங்க போய் தேடுற என்ட பரபரப்பு .......
தம்பிக்கு 3 சேட்டு போதாததுக்கு நாலாவதா ஒரு  டி-சேர்ட்டும் வாங்கனும் அத இந்த டைம் எந்த கடையிலே அடிச்சி எடுக்குர என்ட பரபரப்பு  ..........
வாப்பாவுக்கு நாளைக்கு குடும்பத்த மருதமுனை வீச்சிக்கா இல்ல காத்தான்குடி வீச்சிக்கா கூட்டி போரன்ட பரபரப்பு ........    
இதெல்லாம் போக நமக்கு தங்கச்சிய மொதல் சோல் வாங்க சுருளிட கடைக்கு கூட்டிட்டு போரதா
இல்ல முடிய வெட்ட காந்தன்ட சலூன் கடைக்க போய் பாய போட்டு படுக்குரதா
இல்ல bike யை service பண்ண சர்பான்ட கடைக்கி போய் கொடுத்துடு ஒரு கண்ணுக்கு அவடத்தய படுத்து ஒலும்புரதா
இல்ல சந்தில கூட்டாலி மாரோட நின்டு வெட்டி கத பேசுரயா என்ட கொள்ள பரபரப்பு ... ...  
இத்தனையும் அனுபவிக்கனும் என்டா அதுக்கும்  கொஞ்சமா கொடுத்து வைச்சி இருக்கணும் ஹாஜி
ஆனால் இன்று எங்களுக்கு ஒரே ஒரு பரபரப்புதான்டா கிளி நாளைக்கு என்ன பாடு பட்டோ ஒரு selfiya அடிச்சி happy eid Mubarak  என்னு face book la ஒரு photo 
வீட்ட குடும்பதுக்கு ஒரு photo அபுரமா whatsapp ல கொஞ்சமா status 
இதுதான்யா எங்கள் வெளிநாட்டு பெருநாள் 

மச்சான் சாய்ந்தமருதுல ஒன்னையும் கானலே மருதமுனைக்கு போவோம் வாங்கடா என்று நண்பர்களை இலுத்து கொண்டு  bike யை முறுக்கி கடை கடையாக ஏறிய பின்  நம்மட கல்முனையிலே  abthullah வுலயே better என்டு மீண்டும் ஊருக்கே வந்து உடுப்பு எடுத்த நாங்கள் இன்று என்னத்த உடுப்பு எடுத்து என்ன செய்ய தொழுதுடு வந்தா அந்த பழய சாரன கட்டிக்கி போத்திக்கி படுக்கதானே போரம் இதுக்கு எதுக்கு உடுப்பு என்று புலம்புகிறோம் இதுதான் எங்கள் வெளிநாட்டு ஆடை படலம் 

பெருநாள் என்றாலே முன்று நாள் ரிப் போவோமா இல்ல ஐந்து நாள் ரிப் போவமா  என்று யோசனை செய்த  நாங்கள் 
இன்று மச்சான் பெருநாளைக்கு  என்ட room la set ஆகுரதா இல்ல ஒன்ட roomla set ஆகுரதா என்றாலே  மனதுக்குள் நினைப்பது 
ஒன்ட ரூமுக்கு வந்தாலும் இழுத்து போதிக்கிதான் படுக்க போரோம் என்ட ரூமுக்கயும் இழுத்து போத்திக்கிதான்  படுக்க போரோம் இதுல யார்ர ரூம்லா set ஆனா என்ன என்றே எண்ணுகிறேன் இதுதான் வெளி நாட்டு வாழ்க்கையின் உச்ச கட்ட கொண்டாட்டம்

காலையில் எழுந்து ஒவ்வெரு நண்பனாக சேர்த்து கொண்டு திடலுக்கு சென்று தொழுகையை முடித்து நண்பர்கள் வட்டமே ஒரு செல்பிக்காக ஒரு வட்டம் போடும் பாரு அதை அனுபவித்தவனால் மட்டுமே உணர முடியும் ஆனால் இன்று இந்த அரபு தேசத்தில் பெருநாள் தொழ கூட எனக்கு ஒரு இடம் கிடைக்காமல் அரபா மைதானத்தில் தொங்கோட்டம் ஓடுவதை போன்று அங்கிருத்து இங்கும் இங்கிருந்து அங்குமாக ஓடி இறுதியாக ஏணி படியின் படி கட்டில் நின்று தக்பீர் கட்டி கொண்டு ஸுஜூது செய்ய மல்லு கட்டும் வலி இருக்கிறதே அதான்யா எங்கட பெருநாள் தொழுகையின் உச்ச கட்டம்

தொழுகையை முடித்து வரிசையாக வரும்  பெண்களை பார்த்து 
''மச்சான் இவள் நம்மளோட படிச்ச அவள்லா'' 
''மச்சான் அங்க பார்ரா நம்ம maths பாட teacher பிள்ளையோட போராடா''  என்னு பல பல பழய பல்லவிகளை மீட்டி பார்த்த நாங்கள் 
இன்று இந்த அரபு நாட்டில் ''மச்சான் அவளே பார்ரா'' என்ட ஒடனே அவன் திரும்பி சொல்கிறான் ''அவளுக்கு பின்னால வார அரபிய பாருடா '' என்ற கணமே கால்கள் நடையை மறந்து ஓட்டத்தை எடுக்கும் பாரு இதுவும் இங்கு கொள்ளை அழகுதான் அதோடு நின்று விடுகிறாதா  இத்தனை அரட்டையும் முடித்து விட்டு மச்சான் கடுமயா பசிக்குது வீட்ட போய் சாப்பிட்டுடு ஒரு அரை மணித்தியாலத்தாலே meet ஆவோம் என்று வீட்ட போய் தாயின் புரியானியில் கை வைத்த நாங்கள் இன்று தொழுகை முடிந்தவுடன் ஆள் ஆள் தக்காளியிலும் வெங்காயத்திலும் கையை வைத்து kitchen யை பார்த்து நடக்கிறோம்

எனது உம்மா ஆசையாக செய்த வட்டிலப்பத்தையும் எனது சகோதரி வித்தியாசமான முறையில் செய்த புட்டிங்கயும் 
எனது மற்றய சகோதரி தேடி தேடி செய்த ஜெலியையும் 
எங்க வாப்பா ஆசையாக வாங்கி வந்த பாபுஜீஸ் ஜஸ்கிரீமையும் 
குடும்பமா உட்காந்து திண்ணும் போது
நம்மட கையிலே ஒரு கப் இருந்தாலும் உம்மாக்கிட்ட போய் love சொட்டு ஒன்டு இல்லயா என்று வாயை ஆவென்டு போகும் போது உம்மாவும் கரண்டிய நீட்டிக்கி வருவா பாரு அப்ப பாத்து தம்பி ஓடி வந்து நம்மல தட்டி விட்டு மொதல் எனக்குதான் தரணும் என்டு லவுக்குன்னு கவ்விட்டு போவனே அங்க start ஆகும் சண்டை தொட்டு 
தங்கச்சியின் கப் இல் உள்ள ஜஸ்கிறீமை கையால் எடுத்து மத்த தங்கச்சியின் முகத்தில் பூசி விட்டு ஓடும் போது இரண்டு பேருமா சேந்து திரத்தி வந்து மிதிக்கிர சந்தோஷம் இருக்கே ப்பாஹ் முடில்லடா
இவ்வாறு எண்ணிலடங்க சந்தோஷத்தை அடைந்த எனக்கு இன்று நாட்டில் இருக்கும்  நண்பன்  whatsapp group இல் ஜஸ்கிறீம், வட்டிலப்பம்,புட்டிங் எல்லாம் வைத்த ஒரு கப்பை photo எடுத்து this is my பெருநாள் சாப்பாடு என்று போர்ரான் பாரு
அதை பார்த்த ஒடனே எங்கள் பழய நினைவுகள் ஓடி வந்துரும் அந்த சமயம்  கண்ணால் வர போகின்ற கண்ணீரை வராமல் தடுக்க ஒரு போர் சொய்வோம் பாரு அதான்யா எங்கள் பெருநாள் special லே


தாயுடனும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் அருகில் இருந்துதான் பெருநாள் கொண்டாட முடியவில்லை என்று பார்தால் இப்போது ஒரே நாளில் ஒன்றாக  கூட பெருநாள் கொண்டாட முடியவில்லை அந்தளவுக்கு மார்க்கமும் சின்னாபின்னம் ஆகி விட்டாது 

தாயின் குரல் கேட்க whatsapp இருக்கிறது
உறவுகளின் முகம் பார்க்க imo video call இறுக்கிறது 
நண்பனின் உலாத்தலை பார்க்க face book live video இறுக்கிறது 
சோகம் வந்த share பண்ண whatsapp status இருக்கிறது 
இத்தனையும் அழகாக சாய்ந்து கொண்டு பார்க்க double கட்டிலும் இறுக்கிறது
மாச்சல் வந்தா போத்திக்கு படுக்க நல்ல கனமான வெட் சீட் இருக்கிறது
இதான்யா எங்கள் வெளிநாட்டு பெருநாளின் சுருக்கம் 

இது போன்ற நிலை எதிர்காலத்தில் எதிரிக்கு கூட வர கூடாது என்று வேண்டியவனாக

என் வாழ்க்கை போன்று வாழும் வெளிநாட்டு உறவுகளுக்கும் 
நான் வாழ்ந்ததை போன்று வாழும் என் தாய் நாட்டு உறவுகளுக்கும் 
தியாக திருநாளம் ஹஜ்ஜூ பெருநாள் நல் வாழ்த்துக்கள் 

முனையூர்
சப்றாஸ் அக்மல்

3 comments:

  1. 14 varudangal velinaattu vaalkayil enakkul pulungikkidandha adhe idhayakkumural...
    ummayileye. .. idhu namakku thiyaagatthirunaale....

    ReplyDelete

Powered by Blogger.