Header Ads



ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து, பாகிஸ்தான் வீரர் சாதனை

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஃபஹார் ஜமான் இரட்டை சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் ஃபஹார் ஜமான் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்கள் குவித்துள்ளார். 156 பந்துகளை சந்தித்த ஜமான், 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் இந்த Score-ஐ எடுத்துள்ளார்.

இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை ஜமான் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் 5 வீரர்கள் 7 முறை இரட்டை சதம் அடித்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை இரட்டை சதம் விளாசியவர்கள்

சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 200* (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2010)
விரேந்தர் சேவாக் (இந்தியா) - 219 (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, 2011)
ரோஹித் ஷர்மா (இந்தியா) - 209 (அவுஸ்திரேலியாவுக்கு எதிராக, 2013), 264 (இலங்கைக்கு எதிராக, 2014), 208* (இலங்கைக்கு எதிராக, 2017)
கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) - 215 (ஜிம்பாப்வே, 2015)
மார்டின் கப்தில் (நியூசிலாந்து) - 237* (மேற்கிந்திய தீவுகள், 2015)
ஃபஹார் ஜமான் (பாகிஸ்தான்) - 210* (ஜிம்பாப்வே, 2018)

3 comments:

  1. பாக்கிஸ்தானுக்கு சிம்பாவே அணியுடன் விளையாட மட்டுமே லாயக்கு.

    ReplyDelete
  2. Why? Didn't you forget that much quicker, when Pakistan beat india in champion throphy? And in that match also this man got a ton..

    ReplyDelete

Powered by Blogger.