Header Ads



முஸ்லிம் "டீன் ஏஜி"களிடம், அதிகரிக்கும் ஆபத்து (எச்சரிக்கை றிப்போர்ட்)

என்னையே பார்க்க வேண்டும். எல்லோரும். நான் முதன்மையானவனாக தெரிய வேண்டும். எவர் பெஸ்ட் பேர்சனாலிட்டியாக போஃர் எவர். எப்போதும் எங்கேயும். நைட் கிளப் செல்லும் எல்லோர் இதயங்களும் இதையே பிரார்த்திக்கின்றன.

நைட்-கிளப் என்றாலே துள்ளல், துடிப்பு, வேகம், ஆட்டம். இதற்கு உடம்பில் ஸ்டெமினா வேண்டும். மனசில் சந்தோசம் வேண்டும். இந்த இரண்டிற்கும் Crystal meth வேண்டும். போதை சொல்லித்தரும் பாடம் இது.

எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம். ராத்திரிகள் வந்து விட்டால்..

ஹப்பி மூட் என்போமே அதனுடன் கிளுகிளுப்பான மனோ நிலையும் உடலில் ஒரு ஆட்டமும் வரும் போது அவர்கள் எல்லாவற்றையுமே மறந்து விடுகிறார்கள்.

மைய நரம்பு மண்டல (சிஎன்எஸ்) ஊக்கமருந்து. உடனடியாகவே வேலை செய்யக் கூடியது. ஆனால் எல்லாமே கொஞ்ச நாளைக்குத்தான். சில காலம் செல்லச் செல்ல உடலை அழிக்க ஆரம்பிக்கும். கோகெய்ன் மற்றும் பிற சக்திவாய்ந்த தெரு மருந்துகள் போன்றேஅதே ரகத்தில் இந்த மெத்தப்பெத்தமைன் ஒரு சட்டவிரோத மருந்து.

இது ஒரு ஆபத்தான மற்றும் ஆற்றல்மிக்க இரசாயனம். Crystal meth. போதைப்பாவனையாளர்கள் இதற்கு நிறைய செல்லப் பெயர் வைத்துள்ளனர். Batu, Blade,

Cristy, Crystal glass, Glass, Hot ice, Ice, Quartz Shabu, Shards,

Stove top, Tina, Ventana என. Methamphetamine இந்த இரசாயன வெள்ளை நிற படிகமே சுருக்கமாக மெத் எனப்படுகிறது. நமது தேசத்தில் இதை ஜஸ் என்றோ டான்சிங் டப்ளட் என்றோ அதிகம் அழைப்பார்கள். புகைப்பதன் மூலம், ஊசி மூலம், வாய்வழியாக ஓரலாக இதனை உட்கொள்ள முடியும். 6 முதல் 8 மணிநேர ஊக்க உணர்வினை இதன் மூலம் பெறமுடியும்.

குறைந்த அளவுகளில், மெத்தம்பீடமைன் மனநிலையை உயர்த்துகிறது, உற்சாகத்தை அதிகரிக்கிறது, சோர்வுற்ற நபர்களிடத்தில் செறிவு மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது, பசியின்மை குறைகிறது, மற்றும் எடை இழப்பு ஊக்குவிக்கிறது. அதிக அளவுகளில், அது மூளையில் மன அழுத்தம், எலும்புத் தசை, வலிப்புத்தாக்கம் மற்றும் இரத்தப்போக்கு ஆகியவற்றை தூண்டலாம்.

நாள்பட்ட உயர் டோஸ் பயன்பாடு என்பது கணிக்க முடியாத மற்றும் விரைவான மனநிலை மாற்றங்களை உருவாக்கும். மனம் ஊசலாடும், தூண்டக்கூடிய உளச்சோர்வு, சித்தப்பிரமை, மாயத்தோற்றம், மனச்சோர்வு, மற்றும் மருட்சி மற்றும் வன்முறை நடத்தை ஆகியவற்றைத் தூண்டிவிடும்.

இறுதியில் ஒரு பைத்தியக்காரன் போல சமூகத்தினால் உணரப்படுவான். இளைய தலைமுறை இதனை உணர்வதில்லை. உற்சாகம், சந்தோஷம், கவலை மறந்த நிலை மற்றும் தொடரான கட்டற்ற பாலியல் உணர்வு என இதில் திளைத்து போய் நிற்கிறது.

பொதுவாகவே முஸ்லிம் சமூகம் கலகலப்பையும் சந்தோசமான உற்சாக சூழலையும் விரும்பும் இயல்பு கொண்டது. அது இந்த விடயத்தில் அவர்கள் இதனை நுகர சாதகமாக அமைகிறது.

இளைஞர்கள் இதனை ஹெரொய்ன் போன்ற அபாயகர போதைவஸ்தாக உணர்வதில்லை. 

காரணம் இதனை இவர்கள் உபயோகிப்பது தெருக்களிலும் வீடுகளிலும் அல்ல மாறாக இருண்ட குளிரூட்டப்பட்ட கிளப்களில். அங்கே எல்லோருமே அப்படியிருப்பதனால் எந்த ஒரு கூச்ச உணர்வோ, வெட்க உணர்வோ, குற்ற உணர்வோ யாருக்கும் ஏற்படுவதில்லை.

போதை தெளியும் போது களியாட்டமும் முடிந்திருக்கும். வெளியே சமூகத்தில் இவர்களின் அடிக்சன் தெரியவே வராது. சும்மா பன்னிற்கு மட்டும் தான் என இவர்கள் உளச்சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள். இதனால் இவர்களால் இதைவிட்டும் தவரி முடியாமல் இருக்கிறது.

மறதி அதிகரித்து , நினைவாற்றலை இழந்து, அன்சைட்டி எனும் பதட்ட உணர்வு மிகைத்து, அதீத டென்சன், கட்டுப்படுத்த முடியாத கோபம், அடிக்கடி சலிப்படைதல், எரிச்சலைடதல், சந்தேகம் கொள்ளல், வெறித்தனமான உணர்விற்கு செல்லல் என அவர்கள் முற்றாக மாறி விடுகின்றனர்.

அமெரிக்கன் சைக்கோலொஜி சொஸைட்டி இந்த பாவனையானது பயர்போலர் டிசோடரிற்கு ( இரு துருவக்கோளாறு) அடிப்படையாக அமைகிறது என அண்மையில் கண்டறிந்துள்ளது. இவர்களால் குடும்பம், சமூகம், தேசம் என எல்லாமே குழப்பப்படுகின்றன.

இது அதிகம் குளிசை அல்லது கிறிஸ்டல் வடிவில் இருப்பதனால் சமூக விரோதிகளால் இலகுவாக மருந்துகளுடன் கலந்து சட்டரீதியாக இறக்குமதி செய்ய முடிகிறது.

முஸ்லிம் சமூகத்தில் டீன் ஏஜிலேயே இதற்கு இளைஞர்கள் வசப்படுவது அதிகரித்து வருகிறது. எமது பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்த அவதானமின்மை இதற்கான அடிப்படை காரணமாக அமைகிறது. இது பற்றிய விழிப்புணர்வு பெற்றோரிடம் வருவது அவசியம்.

Roomy Abdul Azeez

3 comments:

  1. Thelivu paduttiyathukku manor.
    Good article.

    ReplyDelete
  2. For what hell are you publishing the names of drugs. Poor media ethics.

    ReplyDelete
  3. போதை வஸ்து ஆபத்து இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் அபாயமாக உள்ளது. மலையக தமிழரிடையே இதன் தாக்கம் எப்படியென தெரியவில்லை. நூறுவருடங்களுக்கு மேலாக வெள்ளை அதிகாரிகளின் அறிக்கைகளில் இலங்கைக்கு வரும் போதைவஸ்துக்களில் கணிசமான பகுதி கிழக்கு மாகாண முஸ்லிம்களைச் சென்றடைகிறது என சொல்லப்பட்டுள்ளது.இது உண்மையா என்கிற கேழ்விகள் எழுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.