Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் செல்லும் பணிகள் நிறைவு - அனுமதி கிடைக்காதோர் கட்டணத்தை மீறப் பெறலாம்

இவ்­வ­ருடம் ஹஜ்­யாத்­திரை மேற்­கொள்­ப­வர்­களின் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்டு விட்­டது. இது தொடர்­பாக ஹஜ் கட­மைக்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தக­வல்கள் அனுப்­பப்­பட்­டுள்­ளன. இது­வரை தக­வல்கள் ஏதும் கிடைக்­கப்­பெ­றாத ஹஜ் பதிவுக் கட்­டணம் 25 ஆயிரம் ரூபாய் செலுத்­தி­யுள்ள  விண்­ணப்­ப­தா­ரிகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திட மிருந்து பதி­வுக்­கட்­ட­ணங்­களை மீளப் பெற்­றுக்­கொள்ள லாம் என அரச ஹஜ் குழு தெரி­வித்­துள்­ளது.

அவ்­வா­றான ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் திணைக்­களம் வழங்­கி­யுள்ள கட்­ட­ணத்­துக்­கான பற்­றுச்­சீட்­டுடன் திணைக்­க­ளத்­துக்கு வருகை தந்து பதிவுக் கட்­ட­ணத்தை மீளப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு அரச ஹஜ் குழுவின்  தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்­தி­ருந்த விண்­ணப்­ப­தா­ரிகள் தமது பய­ணத்தை உறுதி செய்­வ­தற்­காக மீள கைய­ளிக்­கப்­படும் வகை­யி­லான பதி­வுக்­கட்­டணம் 25 ஆயிரம்  ரூபா திணைக்­க­ளத்­துக்கு செலுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3000 ஹஜ் கோட்­டாவே கிடைத்­துள்­ளது.

ஆனால் 3000 க்கும் மேற்­பட்ட விண்­ணப்­ப­தா­ரிகள் பதி­வுக்­கட்­ட­ண­மாக தலா 25 ஆயிரம் ரூபா செலுத்தியிருந்தனர். அவ்வாறு மேலதிகமான விண்ணப்பதாரிகளின் பதிவுக்கட்டணமே திருப்பிக் கையளிக்கப்படவுள்ளன.

2 comments:

  1. இந்த 3000 என்ற எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் இலவசமாக ஹஜ்ஜுக்கு மேல் ஹஜ்ஜு செய்யும் அமைச்சர்கள் , பரிவாரங்கள் மற்றும் பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அடங்கலாகவா?

    அவ்வாறு அடங்கலாக வெனில் ஒன்றுக்கு மேல் ஹஜ் செய்யும் அமைச்சர்கள் பரிவாரங்கள் விட்டுக்கொடுப்புடன் நடந்தால் எமது இஸ்லாமிய பொதுமக்கள் சிலருக்கு ஹஜ்ஜு-செய்வதற்கான வாய்ப்பு கிட்டுமல்லவா.

    ReplyDelete
  2. IPPADIYELLAM IDEA IRUNDAL NAMMA NAADU KUTTY JAPAN POLA AAVI IRKKUMALLAWA????

    ReplyDelete

Powered by Blogger.