Header Ads



யானைக்கும், ரணிலுக்கும் எதிராக பெரிய கூட்டணியை உருவாக்க முயற்சி

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை எதிர்க்கட்சியோடு இணைக்கும் நான் வெகு தூரத்தில் இல்லை எனவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரில் 10 பேர் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சியுடன் இருக்கும் வரை எமது கட்சி அழிந்து போகும்.இதனால், வெகு காலம் செல்லும் முன்னர் அரசாங்கத்தில் இருக்கும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேரை எம்முடன் இணைத்துக்கொள்வோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எதிர்க்கட்சி கொண்டு வரும் தினம் வெகு தூரத்தில் இல்லை.

எமக்கு வேண்டியது பொதுஜன முன்னணி. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிராக பெரிய கூட்டணியை கட்டியெழுப்பி நாட்டின் அதிகாரத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அந்த தினமும் வெகுதூரத்தில் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.