Header Ads



நோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி

அபர்ணாவுக்கு SM சபீஸ் பதில்

நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம்.

ஆனால் 30 நாட்களுக்கும் நோன்பு திறப்பதற்கு பணம் ஒதுக்கியுள்ளதாகவும் உம்ராவுக்கு முஸ்லிம்களை அனுப்புவதாகவும் கூறியுள்ளீர்கள்.

முதலில் நான் ஒன்றினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் உங்களது பணத்தில் முஸ்லிம்கள் நோன்புதிறக்க வேண்டும் என்று உங்களிடம் கையேந்தவில்லை என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்.

சக்தி நிறுவனம் பண்டமாற்று முறையில் விளம்பரம் செய்கின்றோம் நீங்கள்   வருடத்துக்கு ஒருத்தரை உம்ராவுக்கு அனுப்பி தாருங்கள் என்ற ரீதியில் ஹஜ் முகவர்களை தூண்டி ஓரிருவர் உம்ராவுக்கு அனுப்பப்படுவதனை   நாங்கள்  அறிவோம் அதேபோன்று நோன்பு திறப்பு நிகழ்வுகளுக்காக பெரும் பணங்களை இந்நிருவனங்களிடமிருந்து  நீங்கள் அறவீடு செய்வதனையும் நாங்கள் அறிவோம்.

அன்புள்ள சகோதர்களே

நாம் ஏன் இவர்களிடம் கையேந்த வேண்டும் 1911ம் ஆண்டிற்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகவும் கொடூரமான வன்முறைச் சம்பவம் திகனையில் ஆரம்பிக்கப்பட்டதாகும் இதனை சட்ட சிக்கலால் வெளிக்கொண்டு வரமுடியவில்லை என்று நாகூசாமல்  கூறும்  ஊடகதுதடன் நாம் ஏன் முட்டி மோத வேண்டும் எங்களுக்கு துன்பம் ஏற்பட்டவேளையில் கண்டுகொள்ளாத ஊடகத்தை  நாம் ஏன் கருத்தில் எடுக்க வேண்டும்?.

மழை வெள்ளத்தை கண்டவுடன் நிவாரணப்பணியில் இறங்கிய இவர்கள் பத்து நாட்களுக்கு மேல் வெளிவரமுடியாமல் தவிர்துகொண்டிருந்த மக்களை பற்றி கரிசனை கொள்ளாத இந்த ஊடகத்தைபற்றி  நாம் ஏன் பேச வேண்டும்?

நாம் செய்ய வேண்டியது இதுதான் இவர்களின் கஞ்சியும், ஈச்சம் பழமும் இல்லாவிட்டால் நம்மால் நோன்பு திறக்க முடியாதா? இவர்களுக்கு நமது முஸ்லிம்கள் விளம்பரம் கொடுப்பதனால்தானே இவர்கள் உம்ராவுக்கு அனுப்புவதும் நோன்பு திறக்க பள்ளிகளுக்கு வருவதும் இதனை முதல் நாம் நிறுத்த வேண்டும்.

தத்தமது ஊரில் உள்ள பள்ளிவாயல் தலைமைகளுடன் பேசி இவர்களை பள்ளிகளில் நோன்பு திறப்பு விளம்பரங்களை தடுக்க வேண்டும்.

அக்கரைப்பற்றிலுள்ள அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்திக்கு இன்று நாங்கள் கடிதம் ஒன்றினை இது தொடர்பாக வழங்கியுள்ளோம் திகனை சம்பவத்தில் நமது மக்களுக்காக அயராது உழைத்தவர்கள் எங்கள் ஊர் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் அவர்கள் இது தொடர்பாக தீர்க்கமான முடிவினை விரைவில் அறிவிப்பர்.

எமது மக்களின் மரண ஒலிகளை, காதில் வாங்கிக்கொள்ளாத இவர்களின் கால்களில் விழாமல் நிமிர்ந்து நிற்போம்.

10 comments:

  1. சிந்திப்போருக்கு இது ஒரு சிறந்த கட்டுரை

    ReplyDelete
  2. முஸ்லீம் வர்த்தகர்கள் அனைவரும் இணைந்தால் விளம்பரத்தை அடிப்படையாக கொண்ட தொலைகாட்சி சேவையை ஆரம்பிக்க முடியும்

    ReplyDelete
  3. Pahal kanawu kanathirhal muslimkalawathu inaiwathawathu

    ReplyDelete
  4. All ready Sakthi under control by RSS! do you know it??

    ReplyDelete
  5. Better avoid Sakthi TV and FM

    ReplyDelete
  6. Sakthi is run by Hindutva hooligans.

    ReplyDelete
  7. Well Said brother. Same action to be taken by every single Mosque committees. Shakthi TV or FM are not doing anything for free of cost. They ado all these kind of dramas in the money they earn by publishing the advertisements of Muslim businessmen and still using their Media maximum to create bad impact on Sri Lankan Muslims. So many mangoes in one stone.

    ReplyDelete
  8. திட்டமிட்டே முஸ்லிம்களை ஏமாற்றுவது தொழிலாகிவிட்டது எத்தனை பேர் உம்ர அனுப்பி உள்ளது முஸ்லிம் அனாதை இல்லங்களுக்கு சென்றார்களா திசேம்பர் மாதம் வந்தவுடன் ஆரம்பிப்பார்கள் ஏனைய அனாதை இல்லங்களுக்கு செல்ல

    ReplyDelete
  9. First nenka anka work panra muslims ellarayum veliya vara sollunka. Vetti veerappu kaatama.

    ReplyDelete
  10. Well said brother we as muslims must unite first.

    ReplyDelete

Powered by Blogger.