Header Ads



ஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு


திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும் அந்தப் பாடசாலையின் அதிபர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டதாக நம்பகமாகத் தெரியவருகிறது.

அவ்வாறு முடியாது விட்டால் வேறு பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், குறித்த ஆசிரியையிடம் அதிபர் கூறியுள்ளார்.

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை என்று, ஒருவர் மட்டுமே கடமையாற்றுகின்றார். கல்விக் கல்லூரியில் டிப்ளோமா கற்கையினை நிறைவு செய்த இந்த ஆசிரியை – சுமார் 08 மாதங்களுக்கு முன்னர், இந்த பாடசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆம்பம் முதலே, இந்த ஆசிரியையிடம் ஹபாயா அணிய வேண்டாம் என்றும் சேலை அணிந்து வருமாறும் பாடாசலை நிருவாகத்தினர் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று செவ்வாய்கிழமை பாடசாலையின் முகாமைத்துவக் கூட்டம் நடெபெற்றுள்ளது. இதன்போது, அந்தக் கூட்டத்துக்கு குறித்த ஆசிரியையை அழைத்த அதிபர்; “நீங்கள் பாடசாலைக்கு இனி ஹபாயா அணிந்து வரக் கூடாது, சேலைதான் அணிந்து வர வேண்டும். முடியா விட்டால், உங்களுக்கு விருப்பமான பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று விடுங்கள்” என்று உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் அதிபராக செ. பத்மசீலன் என்பவர் கடமையாற்றுகின்றார்.

ஏற்கனவே, திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த 05 முஸ்லிம் பெண் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வந்தமைக்கு, அந்தப் பாடசலையின் நிருவாகமும், பாடசாலை சமூகத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தமையினை அடுத்து, குறித்து ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் ஹபாயாவுக்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

– அஹமட் + புதிது-

15 comments:

  1. Sahoderaehale idu sari waradu.engada urimeye vittu kuduka waanam .pls muslimhaludeye habaya patri ewanukum pesa aruhada illa

    ReplyDelete
  2. Inda habaya ungala enna seydedu.oru pen thanadu udambay marayppadu kutrema?but naga engada uyir ponaalum parewa illa habayawe kalatta maattom.

    ReplyDelete
  3. Waarungal sahoderarhela poraduwom.nagal muslimgal yaarukkum adippaniyawum maattom.payeppadawum maattom.

    ReplyDelete
  4. நாங்கள் முஸ்லீம்கள் பாடசாலைக்கு வெளியிலும் முஸ்லீம்தான் எங்கள் கலாச்சார உடை உடுத்தித்தான் எங்கும் செல்கிறோம்.உங்களில் எத்தனை பேர் அப்படி உள்ளீர்கள் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.பாடசாலைக்கு வெளியில் நீங்கள் குட்ட பாவாடை டெனிம் டீசேர்ட்.இது தான் உங்கள் கலாச்சாரம்.இந்து பாடசாலையெல்லாம் என்ன அவர் அப்பன் வீட்டு சொத்திலா இயங்குகிறது.எனது உடையை தீர்மானிப்பதற்கு நீ யார்

    ReplyDelete
  5. முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு பணிவானதொரு வேண்டுகோள். உடனடியாக இந்த அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்குமாறும் தாமதமாவது அடுத்த பாடசாலைகளுக்கும் பரவி முஸ்லிம்களின் மீது அடாவாடித்தனம் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே தயவு செய்து தாமதிக்காமல் இந்த பணியில் தீவிரமாக இயங்குமாறும் நிச்சியம் ஜிஹாதுடைய கூலி அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கும் எனவும் ஞாபகப்படுத்துகின்றேன்.

    ReplyDelete
  6. THIS IS GOING ON....! THE MORE MUSLIM WOMEN GET KNOCKED ON THEIR HEADS WITHOUT A PROTEST THE MORE THEY GET INSULTED. THIS MATTER HAS TO BE DEALT AT THE TOP LEVEL ONCE AND FOR ALL.

    ReplyDelete
  7. A precedence had been created and all the schools (Sinhala & Tami) will follow this. This dress belongs to KSA that had executed a Sri Lankan toddler for no crime on her part but the Arab child took the last breath at this girl'lab.After this cruelty , Saudi Govt. gave some dates and shaped up this matter. Indonesian females wear their own cultural dress whereas our females wear this Saudi dress. Muslim politics succumbed to National Interests.

    ReplyDelete
  8. Should be implemented everywhere. Hope we can have good results by making this mandatory all over.

    ReplyDelete
  9. Yes, Anusath, we too welcome to implement this, so then, likewise all Hindu teachers those who teach in Muslim schools must wear Habaya. அழிந்தும் அறிவு வராத, வன்மமும் வக்கிரமும் கொண்ட சமுகத்துரோகிகள்,
    இவர் சொன்னதும் உடனே நடை முறைப் படுத்திவிடுவார்கள் என்ற நினைப்பு !!! ஏனெனில் இவர்தான் இலங்கை அரசாங்கத்தின் சட்ட வல்லுநர். என்னே அறிவிலிகள்.

    ReplyDelete
  10. Hindu Tamil wanted another war so it is on the way to destroy you and take your generation to 16th century.

    ReplyDelete
  11. இதற்குரிய அடுத்த வழி

    முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் இந்து ஆசிரியைகளை ஹாபாயா அணியுமாறு வற்புறுத்த வேண்டும். இது ஒன்றுதான் இந்த இன நாய்களுக்கு கட்டும் மருந்து.

    ReplyDelete
  12. ஒரு சமூகத்தின் ஆடைக் கலாச்சாரம் என்பது காலம், கல்வி, இடம் என்பவற்றால் மாற்றம் பெருவது உலகில் வாழ்ந்த எந்தவொரு சமூகம் கடைசி வரை ஒரே ஆடையில் வாழ்ந்ததில்லை, இப்போதிருக்கும் ஹிந்துக்கள், பொளத்தர்கள், முஸ்லிம்களில் சிலர் என்று ஐரோப்பியரின் ஆடையை அணியவே ஆரம்பித்துள்ளனர், தங்களின் பலங்கால ஆடையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர் இது காலத்தின் கட்டாயம் இவ்வாறுதான் உலக அமைப்பு உள்ளது மனிதன் புதிதானவை ஒவ்வொன்றையும் வரவேற்பதில் ஆர்வம் உள்ளவன். அதனால் இஸ்லாம் ஒரு குறித்த ஆடையைச் சொல்லவில்லை பெண்கள் ஆண்கள் மறைக்கவேண்டிய பகுதிகளை மறைத்துக்கொண்டு அழகான ஆடைகளை அணிவதன் மூலம் ஒழுக்கக்கட்டுப்பாட்டைப் பேனுவதற்கு வழிகாட்டுகின்றது.

    ஆடைக் குறைப்பை அதிகரித்து அதிக ஒழுக்கச் சீர்கேடுகளை உருவாக்குவதன் மூலம் மனிதன் சாதிக்க வேண்டிய காலத்தில் தன்னிலை மறந்து செயற்படச் செய்யும் சர்வதேச திட்டங்களை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் சிலரது முயற்சியாகவே நான் இதைக் கருதுகின்றேன். எனவே, சமூகங்களும் ஆரோக்கியமான உறவுகளை வழர்த்துக்கொண்டு இதற்கு ஆபத்தான இவர்களைப் போன்ற சிலரை சட்டத்தின் முன் நிறுத்தி மற்றவர்களைப் பாதுகாப்பதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.

    ReplyDelete
  13. '1921இல் வண்ண்ணார்ப்பண்ணை இராமகிருஷ்ண மிஷன் வைத்தீஷ்வரா வித்தியாலயத்தில் தமது கல்வியை அஸீஸ் ஆரம்பித்தார்.சாரம்,தொப்பி முதலிய இஸ்லாமியரின் கலாச்சார உடையுடன் அஸீஸ் அப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார்." கலாநிதி.எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் எழுதிய‌ எ.எம்.எ.அஸீஸ் எனும் நூலில் காணப்படும் தகவல் இது.

    அன்றைய தமிழ் பெரு மக்களிடம் காணப்பட்ட இப் பெரும் குணம் இன்று மறைந்து விட்டது ஏன்?. எது எப்படியோ முஸ்லிம்களாகட்டும் அல்லது தமிழர்களாகட்டும்,கருத்துக்களை மட்டும் விமர்சியுங்கள் . இது வெறும் அபாயா பிரச்சினை மட்டுமல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  14. உண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது.

    இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை.

    இலங்கையில் பல மதங்கள், இனங்கள் இருப்பினும்,வடக்கு கிழக்கில் எல்லோரும் தமிழ் இனத்தவர்களே. ஆதிகாலம் தொட்டு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எல்லோரும் தமிழ் இன கலாச்சாரத்துடனே ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள், வாழ்த்து வருகிறார்கள், தொடர்ந்தும் வாழ வேண்டும்.

    இலங்கையில் தமிழரோ அல்லது சிங்களவரோ எல்லோரினதும் பொதுவான கலாச்சார உடை என்பது, சேலை, வேட்டி சாரம் மற்றும் கால் சட்டை, சேட்டு ...என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.

    இவ்விடயத்தில் தேவையற்ற, அந்நிய கலாச்சார உடை, நடைகளை மதம் என்ற பெயரில் வியாபார, அரசியல் சுயநலன்களுக்கு அமைதியாக வாழும் மக்களுக்கு திணிக்க முற்படுவது மிகவும் வெறுப்பான செயல்.

    இலங்கை மக்களே, சுயநல மதவாதிகளின் மற்றும் அரசியல் வாதிகளின் தீய நோக்கத்தை அறிந்து விழிப்படையுங்கள்.!

    ReplyDelete
  15. திருகோணமலை சண்முகா அரச இந்துக் கல்லூரியில் ஆசிரியர்கள் அனைவரும் இந்துக்களின் கலாச்சார ஆடையை அணிவது தவிர்க்க முடியாத கடமை என்றால், இலங்கைத் தீவில் அது போன்ற பல நூறு முஸ்லிம் அரச பாடசாலைகள் உண்டு , அப்பாட சாலைகளில் கடமையாற்றும் இந்து ஆசிரியர்களிடம் முஸ்லிம் கலாச்சார ஆடையை (அபாயா) அணிந்து வரும்படி அறிவுறுத்தல் எவ்விதத்திலும் தவறில்லையல்லவா?
    ஆதரவளிப்போர் இதற்கும் அதரவு தருவதே நீதியும் கனவான் தன்மையுமாகும்.
    இச்சட்டம் அமுலுக்கு வருமாயின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் நெஞ்சு, முதுகு, வயிறு, தொப்புள் காட்சிகளை ஒழித்த பெருமையும் அதிபர் சலோச்சனா ஜெயபாலனுக்கே உரித்தாகும், வாழ்த்துக்கள்.

    (எந்த மனிதரிடத்திலும் குறிப்பாக பெண்களிடத்தில் தனது உடலின் பாகங்களை மூடச் சொல்லுவது அவரது சுதந்திரததில் தலையிடுவதாக அமைந்தாலும், அவருக்கு தர்மசங்கடத்தையோ அவமான கூச்ச உணர்வையோ ஏற்படுத்தப் போவதில்லை.
    மாறாக வாழ்நாளில் மூடிக்கொண்டிருந்த தனது உடலின் ஒரு அங்கத்தை கலாச்சாரம் என்ற பெயரில் நிர்பந்தமாக திறக்க வைப்பது எவ்வளவு அநாகரிகம் என்பதை பண்பாடுள்ள சமூகங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்,)

    ReplyDelete

Powered by Blogger.