Header Ads



சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளும், பாதுகாக்கப்படவேண்டும்

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

பெரும்பான்மைச் சமூகம் வாழும் இடங்களில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் ஒரு நாட்டில் வாழ்கின்ற அனைவரும் ஒரே தேச உணர்வோடு வாழ்கிறோம். சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் அவர்களது உரிமைகளும் மதிக்கப்படவேண்டும்.

இவ்வாறு  உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா,மூதூர் சேருவில பகுதிகளில் புதிய அரச கட்டிடங்களை (21)திங்கட் கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் மக்களின் தேவைகளை உணர்ந்து அரச அதிகாரிகள் கடமையாற்றவேண்டும் தான் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சராக இருந்தாலும் அங்கு முஸ்லிம்களின் செல்வாக்குகளும் தனக்கு காணப்படுகிறது.

இந் நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க  போன்றோர்களுடன் ஒத்துழைப்பில் பிரதேச செயலக புதிய கட்டிடங்கள் மற்றும் நிலசெவன கிராமிய அலுவலகம் நாடு பூராகவூம் 1500 அமைக்கப்படவிருக்கிறது.

இதனால் மக்கள் அருகாமையில் ஒரே இடத்திலிருந்து அரச சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.பெரும்பான்மை சிறுபான்மைச் சமூகம் என்று பார்க்காது மூவின மக்களிடையை நல்லிணக்கச் செயன் முறை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கான உரிமைகளும் வழங்கப்படவேண்டும் கூடுதலான பிரச்சினைகள் சிறுபான்மைச் சமூகத்திடம் காணப்படுவதை அறிவோம்.

இதனை தீர்த்து வைக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம் இதனை உங்களூடைய மாவட்ட  பாராளுமன்ற  பிரதிநிதிகள் எங்களிடம் முன்வைப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது .

இது போன்று வடக்குப் பகுதிக்கு முல்லைத்தீவு,கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கும் விஜயம் செய்திருந்தேன் அங்கு மக்களுடைய பிரச்சினைகள் காணப்படுவதை நான்  நன்கறிவேன்.

இவ்வாறான பிரச்சினைகளை மக்களின் நலன் கருதி சிறுபான்மை என்ற வேறுபாடில்லாமல் தீர்த்து வைத்து இன மத நல்லிணக்கத்துக்கான அடித்தளத்தையிட்டு அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து உரிமைகளோடு வாழ வழிசமைப்போம் என்றார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மற்றும் பிரதமர்   ஆகியோர்களது வழிகாட்டலின் கீழ் சேருவில வில்கம் விகாரை உள்வீதிக்கான கொங்ரீட் இடும் அங்குரார்ப்பண நிகழ்வு, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தவினால் உத்தியோகபூர்வமாக திரை நீக்கம் செய்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  தோப்பூரில் 17.5 மில்லியன்  "நிலசெவண" மற்றும்  மூதூர் பிரதேச செயலக 36 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய     கட்டிடத் திறப்பு விழாவும் காலை 10.00 மணிக்கு மூதூர் பிரதேச செயலாளர் ஏ..தாஹீர் தலைமையில் இடம் பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலக 17.5 மில்லியன் ரூபா செலவில் நில செவண, அடிக்கல் நடுகையும், 33 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய  கட்டடத்தையும்  அமைச்சர் திறந்து வைத்தார்.

இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப்,இம்ரான் மஹ்ரூப்,  இம்ரான் மகரூப் துரைரட்ணசிங்கம் முன்னாள் முதலமைச்சர் நஜீப்- மஜீத் மற்றும் சேருவில தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் நளீன் குணவர்தன ,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் சேருவில தொகுதிஅமைப்பாளருமான டொக்டர் அருண சிறிசேன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார ,சேருவில பிரதேச செயலக செயலாளர்உள்ளிட்ட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.