Header Ads



அமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை

திகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் மஹசொன் பலகாயவின் அமித் வீரசிங்கவை கோரியுள்ளார்.

இதனாலேயே கலவரம் நடைபெற்ற பகுதிக்கு தான் சென்றதாக அமித் வீரசிங்க தெரிவித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கூறினார்.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைமைக்காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

 “மஹசொன் பலகாயவின் அமித் வீரசிங்க தெரிவித்துள்ள கருத்து உண்மையானதா? இல்லையா? என்பது அவருக்கும் பிரதி பொலிஸ் மா அதிபருக்குமே தெரியும்.

ஆனால் இக் கருத்து உண்மையா? பொய்யா? என்பதை அவர்களிருவரிதும் கையடக்க தொலைபேசியின் பதிவுகளை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
|
அதனால் இது தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றினை நடத்துமாறு பொலிஸ் மா அதி பரை வேண்டிக் கொள்கிறோம்.

திகன பிரதேசத்தில் இடம் பெற்ற கலவரங்கள் தொடர்பில் பொலிஸார் 129 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 105 பேர் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள் ளார்கள்.

அவர்கள் மீது இதுவரை வழக்குத் தொடரப்படவில்லை . வழக்கு தொடர்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாதுள்ளது. மஹசொன் பலகாய அமித் வீரசிங்க அநுராதபுர சிறைச்சாலையில் வைக்கப்பட் டுள்ளார்.

கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் திகனயில் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் பிரச்சினையைத் தீர்க்க அங்கு வரும்படி வேண்டிக் கொண்டதனாலேயே தான் அங்கு சென்ற தாகவும் அமித் வீரசிங்க கூறு கிறார். 

எனவே இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுயாதீன விசாரணையொன்றினை நடத்த வேண்டும்.

ஆரச்சி கும்புரே சோபித தேரர் கலவரம் இடம்பெற்ற போது மரண வீடொன்றுக்குச் சென்று ஊரடங்குச் சட்டம் ) அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாது அமித் வீரசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது வீட்டில் தங்கியிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

 அமித் வீரசிங்கவின் வீட்டிலிருந்த ஏனைய ஆண்களும் கைது செய்யப்பட்டுள் ளனர்.

சோபித தேரரின் வயிற்றில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தாக்கியிருக்கிறார். இது தொடர்பாக அவரின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழு வுக்கு முறைப்பாடு செய்துள்ளார்கள்.

 ஆனால் மனித உரிமை ஆணைக்குழு இதுவரை விசா ரணை எதுவும் மேற்கொள்ள வில்லை. தற்போது பொலிஸ் ஆணைக்குழுவில் முறையிடு வதற்கு அவர்கள் தீர்மானித் துள்ளார்கள்.

 ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் நீதி நிலைநாட்டப்படுமா? எனத் தெரியவில்லை . பொலிஸ் ஆணைக்குழு கூறுபவைகளை பொலிஸ் மா அதிபர் கேட்பதில்லை என ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படியிருக்கையில் பொலிஸ் ஆணைக்குழு மூலம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றார்.

(ஏ.ஆர்.ஏ. பரீல்)

6 comments:

  1. கண்டி பொலிஸ் மாஅதிபர் அமித் வீரசிங்க என்பவனை
    திகனையில் கலவரம் நடக்கும் என அறிந்து இவனை அங்கு நடக்க போகும் கலவரத்தை அடக்க இவனை அனுப்புவதாயின் இவன் என்ன ?
    அரச பாதுகாப்பு பணியில் உள்ள தலைவருள் ஒருவனா ?
    கலவரம் நடக்கும் என அறிந்ததும் இலங்கை பாதுகாப்பு படையில் என்ன ஆட்கள் இல்லையா (போலிஸ் படை , தரைப்படை , விமானப்படை ) இவைகள் என்ன நாட்டில் தேங்காய் துருவவா உள்ளார்கள்
    இதன் மூலம் சொல்ல வருவது என்னவெனில் குத்ரவாளிகள் யார்ரும் இல்லை எல்லோரும் கலகத்தை தடுக்க வந்தவர்கள் எனவே அனைவருக்கும் விடுதலை .

    ReplyDelete
  2. Banana state."NADUTH HAMUDURUWANGE BADUTH HAMUDURUWANGE" What a big joke that IGP request to the extremist to help to control the riot? what a great Police?What it show is everything planned.It is that country is judiciary is control not by government but by BBS and Sinhale which is having a full blessing of GS Maithri.BBs is backed by Norway and Tamil Diaspora.Tamil Diaspora in human right council issued the statement one month before Kandy Riot that "Srilankan Muslims are not safe in Srilanka and could come under attack" So how they knew in advance that something could happen to Muslims.This clearly shows the connection and the plan of Tamil diaspora with Sinhala extremist to attack Muslims.Tamil Diaspora's aim is to bring more reason in Geneva to show world that minority is not safe in Srialanka.This Extremist,BBs and racist politicians are very cheap in Srilanka could be bought for little dollar which paid by NGO's patronized by Norway and Tamil Diaspora and timing of attack also prove that. As it is the time of starting the human right commission meeting in Geneva.

    the sorry state is that Muslim politicians(stooges) still could not understand the All these forces is getting full blessing of GS Maithri that what he wants is to be real Buddhist and Buddhist votes What is real Buddhist mean that he should be anti minority and specially anti Muslims. So he wants prove that by attacking Muslims.E-news lanka English published his connection to the rioters and advice to the police how to behave with rioters.We cannot expect any justice from this government and President.This according to the E-news Lanka English website.my sources of information is news website.

    ReplyDelete
  3. Correction in the News " His Excellency My3 Pala and Hon. PM Ranil Wickramasinghe had invited Mr. Amith Weeransinge to come to Kandy and control the riots. Therefore, no more charges to Mr. Amith Weerasinge, who will be appointed as RIOTS ADVISOR to present Yahapalanaya Govt."

    ReplyDelete
  4. @ Ishak A. Raheem

    * இந்நாட்டின் சட்டம் இந்நாட்டவர்கள் எல்லோருக்கும் பொதுவான சட்டம் அல்ல.  பொதுவானதோர் சட்டத்தால் ஆளப்படவேண்டிய தேவையில் இந்நாடு உள்ளது.

    * இந்நாட்டின் பாதுகாப்புப் படை வானத்தில் இருந்து இறங்கும் தண்டனைகளை/அனர்த்தங்களை முகங்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது!

    * இத்தனைக்கும் மத்தியில் காயவர்களை உத்தமார்களாக்கும் பணியில் சைபர் படை...noor nizam, ilma etc போன்ற இஸ்லாமிய பெயர்களில் இத்யாதி வகையறாக்கள் வேறு.

    * தீர்வு - இப்புனித மாதத்தில் இறைவனோடு அதிகம் நெருங்கி அவனது அருளை வேண்டுவதுதான்.
    நிச்சயமாக அவன் நம்மைக் கைவிட மாட்டான்.

    ReplyDelete
  5. @ Ishak A. Raheem

    * இந்நாட்டின் சட்டம் இந்நாட்டவர்கள் எல்லோருக்கும் பொதுவான சட்டம் அல்ல.  பொதுவானதோர் சட்டத்தால் ஆளப்பட வேண்டிய தேவையில் இந்நாடு உள்ளது.

    * இந்நாட்டின் பாதுகாப்புப் படை வானத்தில் இருந்து இறங்கும் தண்டனைகளை/அனர்த்தங்களை முகங்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  அது இறக்கப்படுவதற்குக் காரணமான அயோக்கியர்களைக் கட்டுப்படுத்த அல்ல.

    * இத்தனைக்கும் மத்தியில் காயவர்களை உத்தமார்களாக்கும் பணியில் சைபர் படை...noor nizam, ilma etc போன்ற இஸ்லாமிய பெயர்களில் இத்யாதி வகையறாக்கள் வேறு.

    * தீர்வு - பாவங்களை விட்டும் தூரமாகி இறைவனுக்கும் அவனது தூதருக்கும் நெருக்கமான காரியங்களில் ஈடுபடுவதுதான்.  இப்புனித ரமலான் மாதம் நமக்கு அனைத்து விதங்களிலும் நன்மை பயக்குமாறு பயன்படுத்திக் கொள்வோமாக.

    ReplyDelete
  6. itha solla unakku wetkama illa....unakkuthaan ariw illanda paarkura engalukum ariw illanda intha kamman billa ninaikkiraar.....nee sonna sariyahiduma makka.....neethipathy ethuku...courts ethuku...
    ippo solra paaru kalawarattha adakka koopputtatha...athu illa....athuku antha police'm thaan udabthay...theliwa solliyaachu namma kaamman bill....

    ReplyDelete

Powered by Blogger.